Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

tnhighways_header_en

Whats-New-tnrsp smartian  
  • Font Plus
  • Font Default
  • Font Minus
Policy Note 2023-24
Public Works Department - Standard Schedule of Rates 2023-2024
SOR 2023-2024 - Corrected Conveyance table

சென்னை கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தினை பற்றி

சென்னை கன்னியாகுமரி தொழில்தட பயன்விளைப்பகுதியில், தொழில்சாலை இணைப்பு திட்டத்தினை செயற்படுத்திட, சென்னை கன்னியாகுமரி தொழில்தட திட்டமானது தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார தொழிற்துறை வளர்ச்சிகளுக்காக, மாநில, மத்திய நிதியுதவி மற்றும் இதர வெளிநிதி ஆதாரத்துடன் பல்வேறு வகையான சாலை உட்கட்டமைப்பு பணிகளை இத்துறை செயலாக்கி வருகின்றது. கிழக்குக் கடற்கரை தொழில்தட திட்டமானது தமிழகம் மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித் துறையால் அறிவிக்கப்பட்ட ஐந்து தொழில் தடங்களில் ஒன்றாகும். மத்திய அரசு கிழக்குக் கடற்கரை பொருளாதாரதட திட்டத்தினை, ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

சென்னை கன்னியாகுமரி தொழில்தட திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.6448.24 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. இத்திட்டத்தின் கீழ் 16 மாநில நெடுஞ்சாலைகள் சுமார் 589 கிமீ நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. இதில் 2 ஆண்டுகள் கட்டுமானமும் 7 ஆண்டுகள் பராமரிப்பும் அடங்கும்.

சாலை பணிக்கான நில எடுப்பு பணிகளுக்கு ஒப்பந்தம் மூலம் ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நிலஎடுப்பு பணிகள் சரிவர நடைபெறுகிறது என்பதனை கண்காணிக்க வேண்டி ஒப்பந்தம் மூலம் ஒப்பந்தகாரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

16 சாலைகளில் 12 சாலைகளுக்கு ஒப்பந்தம் முடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 3 சாலைகளுக்கு ஒப்பந்த உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.

மேம்படுத்தப்படவுள்ள சாலைகள்

கீழ்கண்ட 15 சாலைகளுக்கு விரிவான திட்ட அறிக்கையானது முடிக்கப்பட்டு தயார் நிலையில் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் மேம்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


வ. எண். இபிசி எண் சாலை மொத்த நீளம் (கி.மீ.)
1. இபிசி-01 செய்யூர் - வந்தவாசி – சேத்துபட்டு - போளூர் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையுடனான இணைப்பு சாலை (மாநெ 115) 109.273
2. இபிசி-02 காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி சாலை (மாநெ 58- பகுதி-2) 41.779
3. இபிசி-03 செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை மற்றும் மிலிட்டரி சாலை (மாநெ 58- பகுதி-1) 39.786
4. இபிசி-04 திருச்செந்தூர் - பாளையம்கோட்டை சாலை (மா நெ 40-1) 50.590
5. இபிசி-05 மேலூர் - திருப்பத்தூர் சாலை (மாநெ 191 ) 30.485
6. இபிசி-06 தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை (மா நெ 63) 29.435
7. இபிசி-07 கும்பகோணம் - மன்னார்குடி சாலை (மா நெ 66) 14.900
8. இபிசி-08 கும்பகோணம் - சீர்காழி சாலை (மா நெ 64) 36.779
9. இபிசி-09 மயிலாடுதுறை - திருவாரூர் சாலை (மா நெ 23) 29.882
10. இபிசி-10 துறையூர் - பெரம்பலூர் சாலை (மா நெ 142) 30.057
11. இபிசி-11 விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலை (மாநெ 69) 22.855
12. இபிசி-12 கடலூர் - பண்ருட்டி - மடப்பட்டு சாலை (மா நெ 9) 37.360
13. இபிசி-13 மோகனூர்- நாமக்கல் - சேந்தமங்கலம் - ராசிபுரம் சாலை (மா நெ 95) 31.500
14. இபிசி-14 திருச்செங்கோடு - ஈரோடு சாலை (மா நெ 79) 11.153
15. இபிசி-15 ஓமலூர் - சங்ககிரி - திருச்செங்கோடு சாலை (மா நெ 86) 51.715
16  இபிசி-16  பாளையம்கோட்டை-அம்பாசமுத்திரம் சாலை (மா நெ 40-2) 21.400
.   மொத்தம் 588.949

1. செய்யூர் (கி.க.சா) முதல் போளூர் (மா.நெ.115) மற்றும் கி.க.சாலை இணைப்புடன்

திட்டப் பகுதி :

109.273 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

ரூ.603.63 கோடி

சாலைபற்றிய விவரம் :

இந்த திட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் தே.நெ. 45க்கு இடையில் சிறந்த சாலை இணைப்பை வழங்குகிறது. திட்ட நீட்டிப்பு காஞ்சிபுரம், வந்தவாசி, மேல்மருவத்தூர், திருவண்ணாமலை மற்றும் திருப்பதி போன்ற யாத்திரை மையங்களுக்குச் செல்ல வேண்டிய போக்குவரத்தை பூர்த்தி செய்யும் இந்த இணைப்புச்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் பாண்டிச்சேரிக்கும் குறுகிய பாதையை வழங்குகிறது. இந்த திட்டம் முன்மொழியப்பட்ட செய்யூரில் அமைக்கப்படவுள்ள 4000 மெகாவாட் மின் திட்ட ஆலையை இணைக்கிறது.

2. செங்கல்பட்டு – காஞ்சிபுரம் (மா.நெ.58 II

திட்டப் பகுதி :

41.779 9 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

ரூ.359.06 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது சென்னை நகர்ப்புறத்தை இணைக்கும் வட்டச்சாலையாகும். இச்சாலையானது கி.க.சாலையை தே.நெ.45ஐயும் (செங்கல்பட்டிலும்), தே.நெ.4ஐ (காஞ்சிபுரத்திலும்) இணைக்கிறது. மேலும் அநேக தொழிற்தலங்கள் உள்ள காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களையும் இணைக்கிறது. மேலும் இரண்டு முக்கிய புனித தலங்களான காஞ்சிபுரம் மற்றும் திருத்தனியையும் முக்கியமான சுற்றுலா மையமான கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள சட்ராஸையும் இணைக்கிறது. இச்சாலை செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரை உள்ளது.

3. செங்கல்பட்டு – காஞ்சிபுரம் (மா.நெ.58)

திட்டப் பகுதி :

39.786 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை / நான்கு வழிச்சாலை

தொகை :

ரூ.448.645 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது சென்னை நகர்ப்புறத்தை இணைக்கும் வட்டச்சாலையாகும். இச்சாலையானது கிழக்கு கடற்கரைச் சாலையை தே.நெ.45ஐயும் (செங்கல்பட்டிலும்), தே.நெ.4ஐ (காஞ்சிபுரத்திலும்) இணைக்கிறது. மேலும் அநேக தொழிற்தலங்கள் உள்ள காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களையும் இணைக்கிறது. மேலும் இரண்டு முக்கிய யாத்திரை தலங்களான காஞ்சிபுரம் மற்றும் திருத்தணியையும் முக்கியமான சுற்றுலா மையமான கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள சட்ராஸையும் இணைக்கிறது. இச்சாலை செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரை உள்ளது.

4. திருச்செந்தூர் முதல் அம்பாசமுத்திரம் பாளையங்கோட்டை சாலை (மா.நெ.40)

திட்டப் பகுதி :

50.59 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

ரூ.282.225 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் யாத்ரீக தலத்தையும் தொழிற்துறையான அம்பாசமுத்திரத்தையும் இணைக்கிறது. இச்சாலை திருச்செந்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை 7ல் இணைகிறது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை தேசிய நெடுஞ்சாலை 7யில் இணைக்கிறது. (கன்னியாகுமரி முதல் பெங்களூரு வரை மற்றும் ஹைதராபாத் முதல் வடஇந்தியா வரை).

5. மேலூர் - காரைக்குடி (வழி) திருப்பத்தூர் - குன்றக்குடி சாலை (மா.நெ.191 மற்றும் மா.நெ. 191 எ)

திட்டப் பகுதி :

30.485 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

ரூ.118.95 கோடி

சாலைபற்றிய விவரம் :

இத்திட்ட சாலையானது மேலூர் மற்றும் திருப்பத்தூரில் உள்ள தே.நெ.45பி மற்றும் தே.நெ.226ன் சி.கே.ஐ.சி மைய வழிகளை இணைக்கிறது. இதன் நீட்டிக்கப்பட்ட பகுதி தே.நெ.210 மற்றும் தே.நெ.45சி-யை காரைக்குடியுடன் இணைக்கிறது. (சி.கே.ஐ.சி.பியின் மாற்று வழி) இச்சாலையானது சுற்றுலாதலமான வெட்டான்குடி பறவைகள் சரணாலயம் மற்றும் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி போன்ற யாத்ரீக மையங்களை இணைக்கிறது.

6. தஞ்சாவூர் முதல் மன்னார்குடி சாலை (மா.நெ.63)

திட்டப் பகுதி :

27.585 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

ரூ.120.60 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது தஞ்சாவூர் முதல் மன்னார்குடி வரையிலான நீளம் குறைவான சாலையாகும். சாலையின் ஆரம்பமானது புகழ்பெற்ற யாத்திரை மையமான தஞ்சாவூரிலிருந்து சுற்றுலா தலமான வடுவூர் பறவைகள் சரணாலயம் மற்றும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகியவற்றை இணைக்கிறது.

7. கும்பகோணம்-மன்னார்குடி (மா.நெ.66)

திட்டப் பகுதி :

14.900 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை.

தொகை :

ரூ. 90.08 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது முக்கிய யாத்திரை தலமான தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தையும், திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி யாத்திரை தலத்தையும் இணைக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது. திருச்சி மற்றும் காரைக்கால் பகுதியில் தே.நெ.யை இணைக்கிறது. இதன் நீட்டிக்கப்பட்டுள்ள பகுதியானது ஆதிராம்பட்டினத்தையும் அரியலூர் முதல் தெற்கு மாவட்ட பகுதியான ராமநாதபுரத்திற்கு மாற்றுப் பாதையாகவும் அமைகிறது.

8. கும்பகோணம்-சீர்காழி சாலை (மா.நெ.64)

திட்டப் பகுதி :

36.779 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

:ரூ. 225.61 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது முக்கியமான இணைப்புச் சாலையாகும். கும்பகோணம் தே.நெ.45சி ஐயும் சீர்காழி தே.நெ. 45எ (நுஊசு) ஐயும் கடலூர் மாவட்டத்தை மையமாக வைத்து இணைக்கும் சென்னை கன்னியாகுமரி தொழில்தட திட்ட சாலையாகும். கும்பகோணம் மற்றும் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 188 வழிபாட்டு தலங்கள் உள்ளன. இச்சாலை முக்கிய நகரமான மயிலாடுதுறையையும் இணைக்கிறது.

9. மயிலாடுதுறை – திருவாரூர் சாலை (மா.நெ.23)

திட்டப் பகுதி :

30.466 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

:ரூ. 193.58 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது கிழக்கு கடற்கரை சாலைக்கு இணையான மாற்றுப் பாதையாகும். இச்சாலையானது முக்கியமான இரண்டு நகரங்களான மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் நகரங்களை இணைக்கிறது. மேலும் காரைக்கால் துறைமுகத்திற்கு செல்லும் தே.நெ.67ஐயும் இணைக்கிறது. இச்சாலையின் நீட்டிக்ப்பட்ட பகுதியானது திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யத்தையும் இணைக்கிறது. இது முக்கியமான சுற்றுலாதலமாகும்.

10. துறையூர் - பெரம்பலூர் சாலை (மா.நெ.142)

திட்டப் பகுதி :

30.057 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

:ரூ. 143.83 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது பெரம்பலூரை (அரியலூர் - பெரம்பலூர்) துரையூருடன் (திருச்சி – புதுக்கோட்டை – சிவகங்கை) இணைக்கிறது. பெரம்பலூர் தே.நெ 45 மற்றும் தே.நெ 22, 6-ன் சந்திப்பில் அமைந்துள்ளது. இது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தஞ்சாவூர் வழியாக இணைக்கிறது. துறையூரானது திருச்சி – ஆத்தூர் சாலையிருந்து சேலம் அணுகுசாலையில் உள்ளது. இச்சாலை இரண்டு முனைகளுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துவதோடு திருச்சியின் நகர்ப்புற பகுதியை கடந்து செல்ல பெரம்பலூரிலிந்து தென்பகுதி போக்குவரத்தையும் இணைக்கிறது.

11. விருத்தாச்சலம் - உளுந்தூர்பேட்டை (மா.நெ.69)

திட்டப் பகுதி :

22.855 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

:ரூ. 136.435 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது பெரும்பாலும் கடலூரின் முனை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளது. தே.நெ.45 மற்றும் தே.நெ.ந532 ன் முக்கிய பாதைக்கிடையே முக்கியமான இணைப்பை வழங்குகிறது. இது கடலூர் நகரத்திற்கு அணுகுசாலையாக அமைகிறது. மேலும் இது பெரிய துறைமுகம் அல்ல. தே.நெ. 45ல் உள்ள உளுந்தூர் பேட்டையை சேலத்தின் தொழில்துறை மையத்துடன் இணைக்கிறது.

12. கடலூர் - மடப்பட்டு ஐங்ஷன் (மா.நெ.9)

திட்டப் பகுதி :

37.36 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

:ரூ. 231.770 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது தே.நெ.45ஐயும் கிழக்கு கடற்கரைச் சாலையையும் இணைக்கிறது. முக்கியமான சுற்றுலா தலங்களான திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை நகரங்களை முக்கியமான நகரமான கடலூருடன் இணைக்கிறது. கடலூர் துறைமுகத்தை தே.நெ.45 உடன் இணைக்கிறது

13. மோகனூர் - நாமக்கல் – சேந்தமங்கலம் ராசிபுரம் சாலை (மா.நெ.95)

திட்டப் பகுதி :

31.5கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

:ரூ. 171.70 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது மோகனூர், நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது. இது தொழில் வளர்ச்சிக்கும், இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாலை காரணமாக உள்ளூர் மக்களுக்கு நல்ல சந்தை, கல்வி மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கிறது.

14. திருச்செங்கோடு - ஈரோடு (மா.நெ.79)

திட்டப் பகுதி :

11.153 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய நான்குவழிச்சாலை

தொகை :

:ரூ. 199.60 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலை முக்கிய நகரங்களான நாமகிரிபேட்டை, ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பள்ளிப்பாளையத்தை இணைக்கிறது. இச்சாலையின் சிறப்பான வடிவமைப்பு காரணமாக உள்ளூர் சந்தைகள், கல்வித்துறை மற்றும் சுகாதார வசதிகள் மேம்பாடு அடைகின்றன.

15. ஓமலூர் - திருச்செங்கோடு (வழி) சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு புறவழிச்சாலையுடன் (மா.நெ. 86)

திட்டப் பகுதி :

51.715 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய நான்குவழிச்சாலை

தொகை :

:ரூ. 446.419 கோடி

சாலைபற்றிய விவரம் :

இந்த திட்டம் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, மற்றும் சிவகங்கை முனையிலிருந்து திருப்பூர் மற்றும் ஈரோட்டின் தொழிற்துறை மையத்திற்கு அணுகும் சாலையை மேம்படுத்துதல், இச்சாலை ஈரோடு வழியாக கோயம்புத்தூரை அடைய தே.நெ.7 மற்றும் தே.நெ. 47க்கு குறுகிய மற்றும் மாற்று சாலையாக செயல்படும் மற்றும் சேலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.

16. திருச்செந்தூர் முதல் அம்பாசமுத்திரம் பாளையங்கோட்டை சாலை (மா.நெ.40 II)

திட்டப் பகுதி :

21.400 கி.மீ.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாடு :

கடின புருவங்களுடன் கூடிய இருவழிச்சாலை

தொகை :

:ரூ. 132.06 கோடி

சாலைபற்றிய விவரம் :

இச்சாலையானது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் யாத்ரீக தலத்தையும் தொழிற்துறையான அம்பாசமுத்திரத்தையும் இணைக்கிறது. இச்சாலை திருச்செந்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை 7ல் இணைகிறது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை தேசிய நெடுஞ்சாலை 7யில் இணைக்கிறது. (கன்னியாகுமரி முதல் பெங்களூரு வரை மற்றும் ஹைதராபாத் முதல் வடஇந்தியா வரை).

Feedback

Visitors Counter

004389274

Click here to watch Live Events
playicon

Last Updated: 04-05-2024
Click to listen highlighted text! Powered By GSpeech