சென்னை எல்லைச் சாலைத் திட்டமானது நெடுஞ்சாலையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கும், துறைமுக இணைப்பை ஏற்படுத்துவதற்கும், திறமையான வர்த்தக போக்குவரத்தினை உறுதி செய்வதற்கும், சென்னையின் 4 முக்கிய ஆர அமைப்பு (ரேடியல்) இணைப்பு சாலைகளான தேசிய
நெடுஞ்சாலைகள் தே.நெ-16 (சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை) , தே.நெ -716 (சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை) , தே.நெ -48 (சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை) , தே.நெ -32 (சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை) ஆகியவற்றை இணைக்கும் வகையிலும் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டமானது 132.87கி.மீ கொண்ட 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது 132.87கி.மீ கொண்ட 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பிரிவு |
தொடக்கம் |
முடிவு |
நீளம் (கி. மீ) |
திட்ட மதிப்பீடு (ரூபாய் கோடியில்) |
I |
எண்ணூர் துறைமுகம் |
சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை 16ல் உள்ள தச்சூர் |
25.40 |
3624.42 |
II |
சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை 16ல் உள்ள தச்சூர் |
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 716 ல் உள்ள திருவள்ளூர் புறவழிச் சாலையின் தொடக்கம் |
26.10 |
6754.40 ( பிரிவு II மற்றும் III மட்டும்) |
III |
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 716ல் உள்ள திருவள்ளூர் புறவழிச்சாலையின் தொடக்கம் |
சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை 48ல் உள்ள ஸ்ரீபெரும்புதூர் |
30.10 |
|
IV |
சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை 48ல் உள்ள ஸ்ரீபெரும்புதூர் |
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை 32 ல் உள்ள சிங்கபெருமாள் கோயில் |
23.80 |
584.00 |
V |
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை 32 ல் உள்ள சிங்கபெருமாள் கோயில் |
கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ள பூஞ்சேரி சந்திப்பு |
27.47 |
747.92 (நில எடுப்பு பணிகளுக்கு மட்டும்) |
• 1.எண்ணூர் துறைமுகம், தச்சூரில் NH-16 (பழைய NH-5 - சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலை) மற்றும் சென்னை வெளிவட்ட சாலைக்கு (CORR) இணைப்புச் சாலை ஆகியவற்றை இணைத்தல்.
• சாலையின் நீளம் : 25.40 கி. மீ
முன்மொழியப்பட்ட சாலையின் அகலம் |
: 100 மீ |
பிரதான சாலை |
:கட்டுப்படுத்தப்பட்ட 6 வழி பிரதான சாலை |
சேவை சாலை |
: இருபுறமும் 2 வழித்தட சேவை சாலை |
நடைபாதை |
:இருபுறமும் 3 மீ நடைபாதை (நடைபாதையின் கீழ் பயன்பாட்டு இடம்) |
மைய தடுப்பான் |
: 8.5 மீ அகலம் |
நிதி நிறுவனம் |
: ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) |
செயல்படுத்தும் நிறுவனம் |
: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் |
3. வேலையின் நிலை
1. நிலம் கையகப்படுத்தும் பணி 96% நிறைவடைந்துள்ளது.
2. கட்டுமான மேற்பார்வை மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
3. கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
1. சாலை கட்டமைப்பு
1. தச்சூரில் NH-16 (பழைய NH-5 - சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலை), தேசியநெடுஞ்சாலை-716, திருவள்ளூர் புறவழிச்சாலையின் தொடக்கம் ஆகியவற்றை இணைத்தல்.
2. சாலையின் நீளம் : 26.10 கி. மீ
1. 13.30 கீ.மீ -தொகுப்பு இபிசி-01 - தே.நெ.-16 இல் தச்சூரில் இருந்து தொடங்கி புன்னப்பாக்கம் வரை.
2. 12.80 கீ.மீ-தொகுப்பு இபிசி-02 - புன்னப்பாக்கத்திலிருந்து தொடங்கி தே.நெ. -716 இல் திருவள்ளூர் புறவழிச்சாலை தொடக்கம் வரை
முன்மொழியப்பட்ட சாலையின் அகலம் |
: 60 மீ |
பிரதான சாலை |
: கட்டுப்படுத்தப்பட்ட 6 வழி பிரதான சாலை |
சேவை சாலை |
: இருபுறமும் 2 வழித்தட சேவை சாலை |
நடைபாதை |
: இருபுறமும் 3 மீ நடைபாதை (நடைபாதையின் கீழ் பயன்பாட்டு இடம்) |
மைய தடுப்பான் |
: 8.5 மீ அகலம் |
நிதி நிறுவனம் |
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) & சர்வதேச வளர்ச்சிக்கான OPEC நிதி (OFID) |
செயல்படுத்தும் நிறுவனம் |
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (TNRIDC) |
3. பணிகளின் தற்போதய நிலை
· நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது
· நில எடுப்பு , மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு பணிகளை செயல்முறைபடுத்தும் ஆலோசகர் (LARR –IC), நில எடுப்பு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு செயல்முறையை மேற்பார்வையிடும் ஆலோசகர் (LARR –MC), திட்ட மேலாண்மை ஆலோசகர் (PMC) கட்டுமான மேற்பார்வை ஆலோசகர்-பிரிவு II (CSC-01) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
· 2-இபிசி தொகுப்புகளுக்கும் ஒப்பந்த புள்ளிகள் அழைக்கப்பட்டுவிட்டது.
·இபிசி -01: கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. ஒப்பந்ததாரர் மூலம் வடிவமைப்பு பணிகள் நடந்து வருகின்றன..
· இபிசி -02: தொழில்நுட்ப ஒப்பந்த புள்ளி மதிப்பீடு முடிக்கப்பட்டு, நிதி ஒப்பந்த புள்ளிகள் 03.02.2022 அன்று திறக்கப்படவுள்ளது
1. சாலை கட்டமைப்பு
1. தேசியநெடுஞ்சாலை-716, திருவள்ளூர் புறவழிச்சாலையின் தொடக்கம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை-48, ஸ்ரீபெரும்புதூர் ஆகியவற்றை இணைத்தல்.
2. சாலையின் நீளம்: 30.10 கி. மீ
1. 10.40 கீ.மீ -இபிசி -03 திருவள்ளூர் புறவழிச்சாலை இருந்து தே.நெ.-716 இல் தொடங்கி வெங்கத்தூர் வரை
2. 10.00 கிமீ -இபிசி -04 வெங்கத்தூரில் இருந்து செங்காடு வரை.
3. 9.7 கிமீ -இபிசி -05 தே.நெ.-48 இல் செங்காடு முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை.
முன்மொழியப்பட்ட சாலையின் அகலம் |
: 60 மீ |
பிரதான சாலை |
: கட்டுப்படுத்தப்பட்ட 6 வழி பிரதான சாலை |
சேவை சாலை |
: இருபுறமும் 2 வழித்தட சேவை சாலை |
நடைபாதை |
: இருபுறமும் 3 மீ நடைபாதை (நடைபாதையின் கீழ் பயன்பாட்டு இடம்) |
மைய தடுப்பான் |
: 8.5 மீ அகலம் |
நிதி நிறுவனம் |
: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) & சர்வதேச வளர்ச்சிக்கான OPEC நிதி (OFID) |
செயல்படுத்தும் நிறுவனம் |
:தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (TNRIDC) (TNRIDC) |
1. பணிகளின் தற்போதய நிலை
1. நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது
2. இபிசி-03 & 04 தொகுப்புகளுக்கும் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் 18.11.2021 அன்று அழைக்கப்பட்டுவிட்டது. ஒப்பந்தம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 03.01.2022 ஆகும்
இபிசி-05: ஒப்பந்த ஆவணம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
முன்மொழியப்பட்ட சாலையின் அகலம் |
: 23.80 கிமீ |
இணைப்பு |
:சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை-48, ஸ்ரீபெரும்புதூர், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை-32, சிங்கபெருமாள் கோயில் ஆகியவற்றை இணைத்தல். |
முன்மொழியப்பட்ட பிரிவு |
: 6 வழி பிரதான சாலை + இருபுறமும் 2 வழித்தட சேவை சாலை |
செயல்படுத்தும் நிறுவனம் |
:தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் |
பணி நிலை |
: பணிகள் முடிந்தது |
முன்மொழியப்பட்ட சாலையின் அகலம் |
: 27.47 கிமீ |
இணைப்பு |
: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை-32, சிங்கபெருமாள் கோயில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரி சந்திப்பு ஆகியவற்றை இணைத்தல். |
முன்மொழியப்பட்ட பிரிவு |
: 4 வழி பிரதான சாலை + இருபுறமும் 2 வழித்தட சேவை சாலை |
செயல்படுத்தும் நிறுவனம் |
: தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் |
பணி நிலை |
: நில எடுப்பு செயல்பாட்டில் உள்ளது. |
நிதி நிறுவனம் |
: அடையாளம் காணப்படவேண்டும் |