
Map for Ongoing Work
பெருநகர அலகு
சென்னை பெருநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் பிரதான சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த பெருநகர அலகு தலைமைப் பொறியாளரின் தலைமையில் ஒரு வட்டம் மற்றும் 5 கோட்டங்களுடன் செயல்பட்டு வருகின்றது.
சென்னை பெருநகர பகுதியிலுள்ள போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் போக்குவரவு மற்றும் போக்குவரத்து ஆய்வு (CTTS-Comprehensive Traffic and Transportation Study) மற்றும் இரண்டாவது பெருந்திட்டத்தின் அடிப்படையில் திட்டப் பணிகளை, சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் (CMDP- Chennai Metropolitan Development Plan) செயல்படுத்த இவ்வலகானது அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான மற்றும் தடையற்ற நகர்ப்புற வாகன போக்குவரத்தை மேம்படுத்த சாலை மேம்பாலங்கள், உயர்மட்டப்பாலங்கள், சாலை / பாலங்களை அகலப்படுத்துதல், இணைப்புச் சாலைகள் அமைத்தல், புறவழிச்சாலைகள் அமைத்தல், நடைமேம்பாலங்கள், நகரும்படிக்கட்டு மேம்பாலம் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சென்னை பெருநகர பகுதியில் இரயில்வே திட்டப்பணிகளின் (RWP-Railway Works Programme) கீழ் பணபகிர்மான அடிப்படையில் (50:50) இரயில்வே மேம்பாலங்கள் / கீழ்பாலங்கள் அமைத்தல் / அகலப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
I. 2022 - 23 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட பணிகள்:
• மேடவாக்கம் மேம்பாலம் (தாம்பரம் – வேளச்சேரி பாலப்பகுதி), 13.05.2022 அன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
• வேளச்சேரி மேம்பாலம் (முதல் அடுக்கு மேம்பாலம் - வேளச்சேரி புறவழிச்சாலை – வேளச்சேரி-தாம்பரம் சாலை பாலப்பகுதி). 17.09.2022 அன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
• கடவு எண்: 32 பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் இரயில்வே மேம்பாலம் (செங்கல்பட்டு – சென்னை பாலப்பகுதி), 17.09.2022 அன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
II. நடைபெற்று வரும் பணிகள்:
• திருவொற்றியூர் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
• பருத்திப்பட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்.
• பாலவாக்கம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையை ஆறுவழித்தடமாக அகலப்படுத்தும் பணி.
• நெடுங்குன்றத்தில் கி.மீ.5/450 - 8/080-ல் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைத்தல்.
• நீலாங்கரையில் இராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் புதிய சாலை பணி (பகுதி - I).
• பெரிய தெற்கத்திய சாலையில், தாம்பரம் இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி (இரயில்வே பகுதி).
• கடவு எண்: 32 பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் இரயில்வே மேம்பாலம் கட்டுதல்.
• கடவு எண்: 27 – குரோம்பேட்டை ராதா நகர் இரயில் நிலையம் அருகில் வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டுதல்.
• மவுண்ட்-பூந்தமல்லி -ஆவடி சாலையில் மியாட் மருத்துவமனை முதல் முகலிவாக்கம் வரை மேம்பாலம் மற்றும் மடிப்பாக்கம் அருகே வாகன சுரங்கப்பாதை ஆகிய இரு பணிகள் மாநில நிதி ஆதாரத்தில், மெட்ரோ இரயில் பணியுடன் ஒருங்கிணைந்த பணியாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) மூலம் செயல்படுத்தப்பட் டு வருகிறது
மேலும், கீழ்கண்ட பணிகள் 2022-23 ஆம் நிதியாண்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
i) மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம்.
ii) கொட்டிவாக்கம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையை ஆறுவழித்தடமாக அகலப்படுத்தும் பணி.
iii) தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை கி.மீ.3/900 - 5/450 அமைக்கும் பணி.
III.2022- 23 ஆம் நிதியாண்டில் ,நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ள பணிகள்:
• கிழக்கு கடற்கரை சாலையில். நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளை ஆறுவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி
• உள்வட்டச் சாலை கி.மீ.12/10-ல் இரயில்வே மேம்பாலம் மற்றும் கி.மீ.12/2 – 13/2-ஐ அகலப்படுத்துதல் (இருஐந்து வழித்தடம்)
• சென்னை உள்வட்டச் சாலையில் கேந்த்ரிய வித்யாலயா பள்ளி அருகில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி.
• சென்னை உள்வட்டச் சாலையில் டெம்பிள் பள்ளி சந்திப்பில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி.
• சென்னை உள்வட்டச் சாலையில் செந்தில் நகர் சந்திப்பில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி.
• சென்னை பெரிய மேற்கத்திய சாலையில் நெல்சன் மாணிக்கம் சந்திப்பில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி.
• சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி.
• சென்னை பெரிய தெற்கத்திய சாலையில் சின்னமலை ஏ.ஜி.சர்ச் அருகில் நடைமேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி.
IV. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையில் உள்ள பணிகள்
• அக்கரை மேம்பாலம்.
• உள்வட்டச் சாலையில் கி.மீ.4/4 மற்றும் பி.டி.ராஜன் சாலை சந்திப்பில் சாலை மேம்பாலம்.
•ஆவடி மேம்பாலம்.
• சேலையூர் அருகே கேம்ப் சாலை சந்திப்பில் மேம்பாலம்
• அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் சந்திப்பில் மேம்பாலம்
• மாதவரம் செங்குன்றம் சாலை கி.மீ.4/2 மற்றும் உள்வட்டச்சாலை கி.மீ.19/100 சந்திப்பில் சாலை மேம்பாலம்
• கொரட்டூர் மேம்பாலம்
• கைவேலி மேம்பாலம்
• குன்றத்தூர் மேம்பாலம்
• வானகரம் மேம்பாலம்
• பூந்தமல்லி – காட்டுப்பாக்கத்தில் மேம்பாலம்
• பாடிக்குப்பம் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலம்.
• கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளை, இணைக்கும் வகையில் நகரும் படிகட்டுகளுடன் ஆகாயநடைபாதை.
• திருமங்கலம் முகப்பேர் சாலையில் D.A.V.மற்றும் வேலம்மாள் பள்ளி அருகே நடைமேம்பாலம்
V. இரயில்வே திட்டப்பணிகளின் கீழ் உள்ள பணிகள் ( RWP-Railway Works Programme)
• திரிசூலத்தில் கடவு எண்: 22, திருவொற்றியூரில் கடவு எண்: 4 மற்றும் விம்கோ நகரில் கடவு எண்: 6 ஆகிய மூன்று இரயில்வே கீழ்பாலப்பணிகளில் இரயில்வே துறையின் பணிகள் முடிவடைந்தபின் நெடுஞ்சாலைப்பகுதி பணிகள் மேற்கொள்ளப்படும்.
• கடவு எண்: 14 வேப்பம்பட்டு மற்றும் கடவு எண்: 16 மீஞ்சூரில் இரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு, நிலஎடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
• ஆவடியில் உள்ள இரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணி மற்றும் சென்னை -திருத்தணி-ரேணிகுண்டா சாலை கி.மீ.75/6-ல் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி ஆகிய பணிகள் 2022-23ஆம் ஆண்டிற்கான இரயில்வே திட்டப்பணிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
![]() ![]() மேடவாக்கம் மேம்பாலம் (தாம்பரம் – வேளச்சேரி பாலப்பகுதி) |
![]() ![]() வேளச்சேரி மேம்பாலம் (முதல் அடுக்கு மேம்பாலம் - வேளச்சேரி புறவழிச்சாலை – வேளச்சேரி-தாம்பரம் சாலை பாலப்பகுதி) |
![]() ![]() கடவு எண்: 32 பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் இரயில்வே மேம்பாலம் (செங்கல்பட்டு – சென்னை பாலப்பகுதி) |