Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

tnhighways_header_en

Whats-New-tnrsp smartian  
  • Font Plus
  • Font Default
  • Font Minus
Policy Note 2023-24
Public Works Department - Standard Schedule of Rates 2023-2024
SOR 2023-2024 - Corrected Conveyance table
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறுவப்பட்டு, தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழ் நாட்டிலுள்ள சாலைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், நிறைவேற்றுதல் மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளுடன் உள்கட்டமைப்பு மேம்பாடு சம்பந்தமான ஆலோசனைகளுடன் கூடிய சேவைகளை வழங்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், (அரசு முதன்மை செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) மற்றும் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட இயக்குநர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக இயக்குநர்கள் குழு :

  1. திரு தீரஜ் குமார், இ.ஆ.ப, அரசு முதன்மை செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை. – தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
  2. திரு. பிரசாந்த் எம். வட்னெரே, இ.ஆ.ப., அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை – இயக்குநர்.
  3. திரு. பிரசாந்த் எம். வட்னெரே, இ.ஆ.ப., அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை – இயக்குநர்.
  4. திருமதி. ஜெயஸ்ரீ, இ.ஆ.ப., அரசுசிறப்பு செயலாளர், தொழில்துறை – இயக்குநர்.
  5. திருமதி. இ.கற்பகம், பி.எஸ்.சி., அரசுதுணைசெயலாளர், எரிசக்திதுறை – இயக்குநர்.
  6. திரு. வே. தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., நிர்வாகஇயக்குநர், தமிழ்நாடுகுடி நீர் வழங்கல் மற்றும் வடிகால்வாரியம் – இயக்குநர்.
  7. திரு. பி.ஆர். குமார், எம். இ., முதன்மைஇயக்குநர், நெடுஞ்சாலைத்துறை – இயக்குநர்.
  8. தணிக்கை குழு உறுப்பினர்கள் :
    1. திருமதி. கீதா, எம். டெக்., செயல் இயக்குநர், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் / தலைமைப்பொறியாளர் (நெ), நபார்டுமற்றும் கிராமசாலைகள்.
    2. திரு. பிரசாந்த் எம். வட்னெரே, இ.ஆ.ப., அரசு கூடுதல் செயலாளர், நிதித் துறை.
    3. திரு. பி.ஆர். குமார், எம்.இ., முதன்மைஇயக்குநர்,நெடுஞ்சாலைத்துறை.
    தொழில்நுட்ப ஒப்புதல் குழு உறுப்பினர்கள் :
    1. திருமதி. கீதா, எம். டெக்., செயல் இயக்குநர், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்.
    2. திரு. பி. ஆர். குமார், எம்.இ., முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை.
    3. திரு. ஆர். கோதண்டராமன், எம். இ,. இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையம்.
    4. திருமதி . சுமதி, எம்.இ., தலைமைப் பொறியாளர் (நெ), திட்டங்கள், வடிவமைப்புகள் மற்றும் புலனாய்வு.
    சாலை திட்டங்கள்
    ஓரகடம் தொழிற் பூங்கா திட்டம் :

    தமிழ்நாட்டின் தற்போதைய தொழிற்சாலை அமைக்க தாராளமயமாக்கப்பட்ட கொள்கைகளால் உற்பத்தி மற்றும் பொறியியல் துறைகள் சார்ந்த தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. உள்நாடு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் பல தொழிற் சாலைகள் நிறுவப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரகடம் மற்றும் திருபெரும்புதூர் பகுதிகளில், உலகின் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள், ஆறு சர்வதேச முன்னணி சீருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் தேசிய வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு உள்கட்டமைப்பு திட்டமையம் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு சிப்காட் மையங்கள் அமைக்கப்பட்டு, பிரம்மாண்ட வளர்ச்சி பெற்று தமிழ்நாட்டின் மிகப் பெரிய தொழிற்சாலை பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.

    மேற்கண்ட தொழில் வளர்ச்சி காரணமாக வாகன போக்குவரத்து செறிவு உயர்ந்துள்ளதால் திறனான உட்கட்டமைப்பு வசதிகள் அவசியமாகிறது. இதனை கருத்திற்கொண்டு ஒரகடம் பகுதிகளில், ஒரகடம் தொழிற்பூங்காவிற்கான சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணி கீழ்கண்டவாறு பல்வேறு நிலைகளில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    நிலை-I

    சிங்கபெருமாள் கோயில் முதல் திருபெரும்புதூர் வரை (24.00 கி.மீ நீள மா நெ எண் 48-ல் பகுதி) மற்றும் வண்டலூர் முதல் வாலாஜாபாத் வரை (33.40 கி.மீ நீள மா நெ எண் 57-ல் பகுதி) மொத்தம் 57.40 கி.மீ நீளமுள்ள சாலையினை ரூ.300.00 கோடி மதிப்பில் இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி எடுத்துக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில் ஒரகடம் சாலை சந்திப்பில் பல்வழிச்சாலை மேம்பாலம் கட்டும் பணியும் உள்ளடங்கும். இத்திட்டமானது ரூ.612.82 கோடி திருத்திய மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    சாலை பணி 56.90 கி.மீ நீளத்திலும் மற்றும் பல்வழிச்சாலை மேம்பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது. திருப்பெரும்புதூர் பகுதியில் 0.50 கி.மீ. நீளத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான நீதி மன்ற வழக்கினால் சாலை பணிகள் நிலுவையில் உள்ளது.

    நிலை -II

    சிங்கபெருமாள் கோயில் – திருபெரும்புதூர் சாலையில் கி.மீ 12/6-24/6 வரையுள்ள நான்கு வழிச்சாலையினை ஆறுவழிச் சாலையாக மேம்படுத்தும் பணி ரூ.86.65 கோடி மதிப்பீட்டில் எடுத்து கொள்ளப்பட்டு பின் ரூ.108.66 கோடி திருத்திய மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு, சாலை பணி 11.20 கி.மீ நீளத்திற்கு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 0.80 கி.மீ நீளத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான நீதி மன்ற வழக்கினால் சாலை பணிகள் நிலுவையில் உள்ளது.

    நிலை -III

    சிங்கபெருமாள்கோயில் – திருபெரும்புதூர் சாலையில் கி.மீ 0/6 - 12/6 (மாநெ-57) வரை நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணி ரூ.115.00 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பணிகள் முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.

    TNRIDC

    சிங்கபெருமாள்கோவில்–திருப்பெரும்புதூர் சாலை (மா.நெ. -57) கி.மீ9/500-9/700

    TNRIDC

    சிங்கபெருமாள்கோவில்–திருப்பெரும்புதூர் சாலை(மா.நெ.-57) கி.மீ.11/200-11/400

    TNRIDC

    சிங்கபெருமாள்கோவில்–திருப்பெரும்புதூர்சாலை(மா.நெ.-57) கி.மீ. 13/700-13/900

    TNRIDC

    சிங்கபெருமாள்கோவில்–திருப்பெரும்புதூர் சாலை(மா.நெ. -57)கி. மீ.14/200-14/400

    நிலை -IV

    வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் கி.மீ 30/4 – 47/0 வரை நான்கு வழிச்சாலையிலிருந்து ஆறுவழிச் சாலையாக மேம்படுத்துதல் மற்றும் படப்பை புறவழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்பு பணி உட்பட, ரூ.189.81 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பணிகள் முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.

    TNRIDC

    வண்டலூர் - வாலாஜாபாத் சாலை(மா.நெ. -48) கி. மீ. 31/000-31/200

    TNRIDC

    வண்டலூர் - வாலாஜாபாத் சாலை (மா.நெ -48) கி.மீ.42/000-42/200

    படப்பை புறவழிச்சாலைக்கு பதிலாக பல்வழிச் சாலை மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்வதற்கு ரூ.25.52 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இப் பணிக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நிலை -V

    வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் கி.மீ 47/0 - 63/8 வரை நான்கு வழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணி ரூ.180.09 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 90 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 0.80 கி.மீ நீளமுள்ள பகுதியில் நிலஎடுப்பினால் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    TNRIDC

    வண்டலூர் - வாலாஜாபாத் சாலை (மாநெ-48) கி..மீ 58/600

    TNRIDC

    வண்டலூர் - வாலாஜாபாத் சாலை(மாநெ-48) கி..மீ 54/400

    மதுரை சுற்றுச் சாலைத் திட்டம்

    மதுரை சுற்றுச் சாலையானது (கி..மீ. 0/0 – 27/2) மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு அருகில் துவங்கி தேசிய நெடுஞ்சாலை எண்-44ல் கப்பலூர் தொழிற் பூங்கா வரை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித் தடமாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டமானது ரூ. 213.69 கோடி மதிப்பில் கட்டுதல் இயக்குதல் மற்றும் திரும்ப ஒப்படைத்தல் (சுங்கம் வசூலித்தல்) முறையில் 2015-16ல் எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்பணிக்கான ஒப்பந்தகாலம் இரண்டு வருடம் உள்பட கட்டுமான காலத்தையும் சேர்த்து மொத்தம் 20 வருடகாலமாகும். இத்திட்டத்தில் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணிகள் மற்றும் பாலங்களில் கூடுதல் இருவழிக்கொண்ட விராகனூர் மற்றும் கப்பலூர் ஆகிய இரண்டு இடங்களில் இரயில்வே மேம்பாலங்களும் மற்றும் வைகை ஆற்றின் குறுக்கே ஒரு உயர்மட்ட பாலமும் உள்ளடங்கும். இப்பணி 17.04.2017 அன்று துவங்கப்பட்டு அணைத்துப் பணிகளும் 21.08.2021ல் முடிக்கப்பட்டு பொது மக்கள் மற்றும் வணிக வாகன போக்குவரத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

    TNRIDC TNRIDC
    மதுரை விமான நிலையம் அருகில் கி..மீ 15/500 – 16/500 வாகன சுரங்கப்பாதை அமைத்தல்

    மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படஉள்ளதால் தற்போது உள்ள மதுரை சுற்றுச் சாலையை விமான நிலைய விரிவாக்கப் பகுதிக்கு கீழே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே மாண்பு மிகு பொதுப் பணித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ் நாடு அரசு சட்டசபையில் வாகன சுரங்கப்பாதை அமைக்க அறிவித்துள்ளார். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

    சென்னை எல்லைச் சாலைத் திட்டம்

    சென்னை எல்லைச் சாலை திட்டமானது எண்ணூர் துறைமுகத்தையும், மாமல்லபுரம் (பூஞ்சேரி சந்திப்பு) இணைக்கும் வகையில், 132.87 கி..மீ நீள இச்சாலையினை ஐந்து பிரிவுகளாக சாலை அமைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    அரசாணை நிலை எண்.150, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் (ழறு-2) துறை நாள் 29.11.2019ல் தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மூலம் பிரிவு II, III, IV, &. V மொத்தம் 107.47 கி.மீ நீள சென்னை எல்லைச் சாலை செயலாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    பகுதி 2: தே.நெ.16ல் தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை ஆரம்பம் வரை (26.10 கி.மீ)

    பகுதி 3: திருவள்ளூர் புறவழிச்சாலை ஆரம்பம் முதல் தே.நெ.48ல் திருபெரும்புதூர் வரை (30.10 கி.மீ)

    பகுதி 4: தே.நெ.48ல் திருபெரும்புதூர் முதல் தே.நெ.32ல் சிங்கப்பெருமாள் கோவில் வரை (23.80 கி.மீ)

    பகுதி 5: தே.நெ.32ல் சிங்கப்பெருமாள் கோவில் முதல் மாமல்லபுரம் வரை (27.47கி.மீ)

    TNRIDC
    வ. எண் பிரிவு தொகுப்பு வேலையின் பெயர் தற்போதைய நிலை
    1 பிரிவு – 2 இபிசி - 01 சென்னை எல்லைச் சாலை திட்டம், பிரிவு - 2, சிப்பம் - 1ல் தச்சூர் (வடிவமைப்பு கி.மீ 21+700) முதல் புன்னபாக்கம் (வடிவமைப்பு கி.மீ 35+000) வரை கடினப்புருவத்துடன் கூடிய புதிய ஆறு வழிச்சாலை அமைத்தல் மற்றும் சாலையின் இரு புறமும் இரு வழித்தடத்தினை கொண்ட சேவைச் சாலை அமைக்கும் பணிக்கு பொறியியல், கொள்முதல், கட்டுமானம் (நுஞஊ) முறையில் 7 வருட சாலை பராமரிப்பு உட்பட ஒப்பந்தம் செப்டம்பர் 2021ல் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
    2 பிரிவு – 2 இபிசி - 02 சென்னை எல்லைச் சாலை திட்டம், பிரிவு - 2, நுஞஊ 02 சிப்பம்-ல் புன்னபாக்கம் (வடிவமைப்பு கி.மீ 35+000) முதல் திருவள்ளூர் புற வழிச்சாலை (வடிவமைப்பு கி.மீ 47+800) வரை கடினப்புருவத்துடன் கூடிய புதிய ஆறு வழிச்சாலை அமைத்தல் மற்றும் சாலையின் இரு புறமும் இரு வழித்தடத்தினை கொண்ட சேவைச் சாலை அமைக்கும் பணிக்கு பொறியியல், கொள்முதல், கட்டுமானம் (நுஞஊ) முறையில் 7 வருட சாலை பராமரிப்பு உட்பட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஆய்வில் உள்ளது.
    3 பிரிவு – 3 இபிசி - 03 சென்னை எல்லைச் சாலை திட்டம், பிரிவு - 3, சிப்பம் நுஞஊ 03 திருவள்ளூர் புறவழிச்சாலை (வடிவமைப்பு கி.மீ 47+800) முதல் வெங்கத்தூர் (வடிவமைப்பு கி.மீ 58+200) வரை கடினப்புருவத்துடன் கூடிய புதிய ஆறு வழிச்சாலை அமைத்தல் மற்றும் சாலையின் இரு புறமும் இரு வழித்தடத்தினை கொண்ட சேவைச் சாலை அமைக்கும் பணிக்கு பொறியியல், கொள்முதல், கட்டுமானம் (EPC) முறையில் 7 வருட சாலை பராமரிப்பு உட்பட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஆய்வில் உள்ளது.
    4 பிரிவு – 3 இபிசி - 04 சென்னை எல்லைச் சாலை திட்டம், பிரிவு - 3, சிப்பம் EPC 04 வெங்கத்தூர் (வடிவமைப்பு கி.மீ 58+200) முதல் செங்காடு (வடிவமைப்பு கி.மீ 68+200) வரை கடினப்புருவத்துடன் கூடிய புதிய ஆறு வழிச்சாலை அமைத்தல் மற்றும் சாலையின் இரு புறமும் இரு வழித்தடத்தினை கொண்ட சேவைச் சாலை அமைக்கும் பணிக்கு பொறியியல், கொள்முதல், கட்டுமானம் (EPC) முறையில் 7 வருட சாலை பராமரிப்பு உட்பட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஆய்வில் உள்ளது.
    4 பிரிவு – 3 இபிசி - 05 சென்னை எல்லைச் சாலை திட்டம், பிரிவு - 3, சிப்பம் EPC 05 செங்காடு (வடிவமைப்பு கி.மீ 68+200) முதல் திருபெரும்புதூர் (வடிவமைப்பு கி.மீ 77+900) வரை கடினப்புருவத்துடன் கூடிய புதிய ஆறு வழிச்சாலை அமைத்தல் மற்றும் சாலையின் இரு புறமும் இரு வழித்தடத்தினை கொண்ட சேவைச் சாலை அமைக்கும் பணிக்கு பொறியியல், கொள்முதல், கட்டுமானம் (EPC) முறையில் 7 வருட சாலை பராமரிப்பு உட்பட வரைவு ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் AIIBக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    கூடுவாஞ்சேரி – சிங்கபெருமாள்கோயில் இரயில்வே நிலையங்களுக்கு இடையில் கடவு பாதை எண்.47க்கு பதிலாக இரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள்

    தேசிய நெடுஞ்சாலை 32I (சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை) சென்னை எல்லைச் சாலை திட்டத்துடன் இணைக்க சிங்கபெருமாள்கோயில் இரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு 10.11.2021 அன்று ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

Feedback

Click here to watch Live Events
playicon

Visitors Counter

004339171
Last Updated: 25-04-2024
Click to listen highlighted text! Powered By GSpeech