குழுமங்கள், மன்றங்கள், குழுக்கள் மற்றும் இதர அமைப்புகள்
பொறியாளர்கள் குழுமம் (BOE)
பொறியாளர்கள் குழு என்பது நெடுஞ்சாலைத்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஓர் உயர்மட்ட தொழில்நுட்ப அதிகார அமைப்பாகும். இவ்வமைப்பானது, அரசாணை (நிலை) எண்:359 நெடுஞ்சாலைத் (எச்.என்.1) துறை, நாள்:12.08.1997 மூலம் உருவாக்கப்பட்டு அரசாணை (நிலை) எண்:1 நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் (எச்.என்.1) துறை, நாள்:07.01.2011 மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பு அணைத்து தலைமைப் பொறியாளர்கள், இயக்குனர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் ஆகியோரை உள்ளடக்கியது, இவ்வமைப்பானது முதன்மை இயக்குனர் தலைமையில் தொழில்நுட்பம் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுக்கிறது.
தலைவர்முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை.
உறுப்பினர்கள்- 1. தலைமைப் பொறியாளர் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு.
- 2. தலைமைப் பொறியாளர் (நெ), தேசிய நெடுஞ்சாலை..
- 3. தலைமைப் பொறியாளர் (நெ), திட்டங்கள்.
- 4. தலைமைப் பொறியாளர் (நெ), நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்.
- 5. தலைமைப் பொறியாளர் (நெ), திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு.
- 6. இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம்.
- 7. தலைமைப் பொறியாளர் (நெ), பெருநகரம்.
- 8. தலைமைப் பொறியாளர் (நெ), தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் - II.
- 9. தலைமைப் பொறியாளர் (நெ), சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்டம்.
பணிகளின் செயலாக்கத்தின்போது பின்பற்றக்கூடிய புதிய பொறியியல் நுட்பங்களை இக்குழுமம் பரிந்துரைக்கிறது. மேலும், நிர்வாக சீரமைப்பு ஏதேனும் தேவைப்படின் இக்குழுமம் அரசிற்கு பரிந்துறைகளை அளிக்கிறது.
மேலும், ரூ.50 லட்சம் வரையிலுள்ள ஒப்பந்த மதிப்புடைய மற்றும் 6 சதவிகிதத்திற்கு மேல் மற்றும் 10 சதவிகிதத்திற்கு உட்பட்ட ஒப்பந்த விலைப்புள்ளி தொடர்பான ஒப்பந்தங்களை ஏற்கும் அதிகாரத்தையும் இக்குழுமம் மேற்கொள்கிறது.
தொழில்நுட்ப தணிக்கை குழு (TAC)தொழில்நுட்ப தணிக்கை குழுவானது, தலைமைப் பொறியாளர் (நெ) பொது, சுற்றறிக்கை குறிப்பாணை எண்: 13555/ஒப்பந்தம்-1/2009 நாள் 02.05.2009 – ன் படி உருவாக்கப்பட்ட பொறியாளர் குழுவின் உறுப்பினர்களை உள்ளடக்கிய அமைப்பாகும். தலைமைப் பொறியாளர்களால் தொழில்நுட்ப ஒப்புதல் அளிப்பதற்கு முன், மதிப்பீடுகளில் உள்ள பல்வேறு தொழில்நுட்பக் கூறுகள் தொடர்பான நிபுணத்துவ கருத்துகளை இப்பொறியாளர் குழுமம் வழங்குகிறது. இக்குழுவானது, ரூ.5 கோடிக்கு மேற்பட்ட பாலப்பணிகள் மற்றும் ரூ.10 கோடிக்கு மேற்பட்ட சாலைப்பணிகளுக்கும் தேவையான தொழில்நுட்ப பரிந்துரைகளையும் வழங்குகிறது.
திருத்திய நிர்வாக ஒப்புதலுக்கான குழு (RASC)திருத்திய நிர்வாக ஒப்புதலுக்கான குழுவானது, அரசாணை (நிலை) எண்:289 நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் (எச்.என்.1) துறை, நாள்:04.12.2008 மற்றும் அரசாணை (நிலை) எண்:1 நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் (எச்.என்.1) துறை, நாள்:07.01.2011 ஆகியவற்றின்படி, கீழ்க்கண்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் நிதித்துறை அலுவலர்களை உள்ளடக்கியது. இக்குழு திட்ட முன்மொழிதல்களை செயலாக்கம் செய்யவும் மற்றும் ஒப்புதல்களை விரைவுபடுத்தவும் உதவுகிறது.
- 1. முதன்மை இயக்குநர் (நெ).
- 2. சம்மந்தப்பட்ட தலைமைப் பொறியாளர்.
- 3. தலைமைப் பொறியாளர் (நெ), திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு.
- 4. அரசு துணைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை.
- 5. அரசு துணைச் செயலாளர், நிதித்துறை.
ஒப்பந்தப்புள்ளி ஆணையமானது, அரசாணை (நிலை) எண்:21/நெடுஞ்சாலைத் (எச்.என்.2) துறை, நாள்:25.01.1999 – ன் படி உருவாக்கப்பட்டு ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையை சீரமைக்கிறது. அரசாணை (நிலை) எண்:16/நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் (எச்.என்.1) துறை, நாள்:11.02.2013 மற்றும் அரசாணை (நிலை) எண்:1/ நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் (எச்.என்.1) துறை, நாள்:07.01.2011 அவற்றின்படி இக்குழுவானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி ஆணையத்தின் உறுப்பினர்கள்:
- 1. அரசு செயலாளர்கள், நிதித்துறை அல்லது அவரின் பிரதிநிதி.
- 2. ஆணையர் மற்றும் உறுப்பினர் - முதன்மை இயக்குநர் (நெ).
- 3. உறுப்பினர் - தலைமைப் பொறியாளர் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு
- 4. உறுப்பினர் - தலைமைப் பொறியாளர் (நெ), நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்.
- 5. உறுப்பினர் - திட்டங்களை ஆரம்பத்தில் பரிந்துரைத்த தலைமைப் பொறியாளர்கள்/கண்காணிப்பு பொறியாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பார்கள்.
ஒப்பந்தப்புள்ளி ஆணையமானது, அரசாணை (நிலை) எண்:163/ நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் (எச்.என்.1) துறை, நாள்: 01.10.2012 -ன்படி கீழ்க்கண்ட மதிப்புள்ள ஒப்பந்தங்களை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்கிறது.
- 1. ஒப்பந்த மதிப்பு ரூ. 50 லட்சம் வரை மற்றும் ஒப்பந்த புள்ளியை விட 10% அதிகமாக இருத்தல்.
- 2. ஒப்பந்த மதிப்பு ரூ. 1.00 கோடி வரை மற்றும் ஒப்பந்த புள்ளியை விட 6% அதிகமாக இருத்தல்.
- 3. அனைத்து தனிப்பட்ட வேலைக்கும், ஒப்பந்த மதிப்பு ரூ. 1.00 கோடி முதல் ரூ. 6.00 கோடி வரையிலான, எந்த ஒரு கூடுதலான ஒப்பந்தப்புள்ளிக்கும்.
- 4. அனைத்து தொகுப்புகளுக்கும், ஒப்பந்த மதிப்பு ரூ. 1.00 கோடி முதல் ரூ. 7.5 கோடி வரையிலான, எந்த ஒரு கூடுதலான ஒப்பந்தப்புள்ளிக்கும். .
- 5. அனைத்து தனிப்பட்ட வேலைக்கும், ஒப்பந்த மதிப்பு ரூ. 6.00 கோடிக்கு மேலான, எந்த ஒரு கூடுதலான ஒப்பந்தப்புள்ளிக்கும்.
- 6. அனைத்து தொகுப்புகளுக்கும் ஒப்பந்த மதிப்பு ரூ. 7.50 கோடிக்கு மேலான, எந்த ஒரு கூடுதலான ஒப்பந்தப்புள்ளிக்கும். வேலைகளின் போது அடுத்தடுத்து ஏற்படும் மறுபாடுகளுக்கான தொகையானது, ஒப்பந்த மதிப்பை காட்டிலும் 1% அதிகமாக இருந்தால் ஒப்பந்தப்புள்ளி ஆணையத்தின் தீர்ப்பிற்காக வைக்கப்படும்.
அசல் ஒப்பந்தக்காரரால் செயல்படுத்தப்பட வேண்டிய அளவுகள் கூடுதலாக 25% / புதிய உருப்படிகள் / மாற்று உருப்படிகளுக்கான அங்கீகாரத்தை பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு அளிக்க வேண்டும்:
- 1. சம்பந்தப்பட்ட தலைமை பொறியாளர்.
- 2. தலைமைப் பொறியாளர் (பொதுப்பணித் துறை), இயக்கம் மற்றும் பராமரிப்பு, சென்னை -5.
- 3. முனைவர். கே.குணசேகரன், பேராசிரியர், குடிமுறைப் பொறியியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -25.
இணை இயக்குநர் (நிர்வாகம்) அவர்கள் நிபுணர் குழுவின் அழைப்பாளராக இருப்பார்.
நிலையான விலை அட்டவணை நிர்ணயிக்கும் குழுநெடுஞ்சாலைத் துறையின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப, நிலையான விலை அட்டவணையைத் தயாரிக்க, பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழு, அரசாணை (நிலை) எண்:21 / நெடுஞ்சாலைகள் (எச்.என் -1) துறை, நாள்: 25.01.1999, மற்றும் அரசாணை (நிலை) எண்:1 / நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் (எச்.என் -1), நாள்: 07.01.2011 மூலம் அமைக்கப்பட்டது.
- 1. உறுப்பினர் - முதன்மை இயக்குநர் (நெ)
- 2. உறுப்பினர் - தலைமைப் பொறியாளர் (பொதுப்பணித் துறை), இயக்கம் மற்றும் பராமரிப்பு, சென்னை -5.
- 3. உறுப்பினர் - தலைமைப் பொறியாளர் (நெ), திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு.
- 4. உறுப்பினர் - நிதித் துறையின் பிரதிநிதி.
குறிப்பிடப்பட்ட குழுவானது, துறையின் உள்தேவைகளுக்கான திட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து செயல்படுத்த உதவுகிறது.
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர்கள் குழு- 1. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் - அரசு முதன்மை செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை.
- 2. இயக்குநர் - அரசு துணை செயலாளர், நிதித்துறை.
- 3. இயக்குநர் - அரசு சிறப்பு செயலாளர், தொழில்துறை.
- 4. இயக்குநர் - நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்.
- 5. இயக்குநர் – அரசு துணை செயலாளர், எரிசக்தி துறை.
- 6. இயக்குநர் – முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை.
- 7. இயக்குநர் – தலைமைப் பொறியாளர் (நெ), நபார்டு மற்றும் கிராமச் சாலைகள.
- 8. செயல் இயக்குநர் - தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்.
- 1. துணை அரசு செயலாளர், நிதித்துறை.
- 2. முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை.
- 3. தலைமைப் பொறியாளர் (நெ), நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்.
- 4. செயல் இயக்குநர், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்.
- 1. முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை.
- 2. தலைமைப்பொறியாளர் (நெ), திட்டங்கள், வடிவமைப்புகள் மற்றும் புலனாய்வு.
- 3. இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம்.
- 4. செயல் இயக்குநர் - தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்.