Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

tnhighways_header_en

Whats-New-tnrsp smartian  
  • Font Plus
  • Font Default
  • Font Minus
Policy Note 2023-24
Public Works Department - Standard Schedule of Rates 2023-2024
SOR 2023-2024 - Corrected Conveyance table

வரைபடங்களைக் காண இங்கு கிளிக் செய்க



நெடுஞ்சாலைத்துறை

நபார்டுமற்றும்கிராமச்சாலைகள்

நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் அலகில் ஒரு தலைமைப் பொறியாளரின் கீழ் 4 கண்காணிப்புப்பொறியாளர்கள் வட்ட அளவிலும் (செங்கல்பட்டு, சேலம், திருச்சிமற்றும்திருநெல்வேலி) மற்றும் 14 கோட்டப்பொறியாளர்கள் கோட்ட அளவிலும் செயல்பட்டுவருகின்றனர்.

செயல்பாடுகள்:

o ஊராட்சி ஒன்றியசாலைகள் / ஊராட்சி சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்துதல்.

o ஆற்றுப்பாலங்கள் கட்டும் பணிகள்.

o இரயில்வே கடவுகளில் சாலை மேம்பாலம் / கீழ்பாலம் கட்டும்பணிகள்.

o முக்கிய நகரங்களுக்கான புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள்.

மேற்கொள்ளப்படும்முக்கியதிட்டங்கள்:

நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியசாலைகளில் ஆற்றுப்பாலங்கள் கட்டுதல்

இத்திட்டத்தின்கீழ், 2022-23-ல் நிலுவையிலிருந்த ரூ.888.78 கோடிமதிப்பிலான 202 பாலப்பணிகளில், 28 பணிகள் முடிவுற்றன மற்றும்மீதமுள்ள 174 பணிகள் வெவ்வேறு நிலைகளில் உள்ளன.

2022-23ஆம் நிதியாண்டிற்கு ரூ.516.11 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

மாநிலநிதியின்கீழ் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியசாலைகளில் ஆற்றுப்பாலங்கள் கட்டுதல்

இத்திட்டத்தின்கீழ், 2022-23-ல் ரூ.21.28 கோடி மதிப்பிலான 3 பாலப்பணிகள் நிலுவைப் பணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. தற்பொழுது 3 பணிகளும் வெவ்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

2022-23ஆம் நிதியாண்டிற்கு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில நிதியின்கீழ் ஊராட்சி ஒன்றியசாலைகள், ஊராட்சி சாலைகளை தரம் உயர்த்துதல்

இத்திட்டத்தின்கீழ், 2022-23-ல், நிலுவையிலிருந்த ரூ.535.59 கோடிமதிப்பிலான 345.20 கி.மீ நீளமுடைய 138 சாலைப்பணிகளில், 123.14 கி.மீ. நீளமுடைய 56 சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 222.06 கி.மீ. நீளமுடைய 82 சாலைப்பணிகள் வெவ்வேறு நிலைகளில் உள்ளன.

2022-23 ஆம் நிதியாண்டிற்கு, ரூ.1032.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரயில்வே பணித்திட்டத்தின் கீழ் சாலை மேம்பாலங்கள் / சாலை கீழ் பாலங்கள்கட்டுதல்

இரயில்வே பணித்திட்டத்தின்கீழ் 2022-23-ல், ரூ.107.53 கோடிமதிப்பிலான 10 சாலை மேம்பாலங்கள் / சாலை கீழ் பாலங்கள் நிலுவைப்பணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், 4 இரயில்வே மேம்பாலம் / கீழ்பாலங்கள் (கடவு.எண்.2, கடவு.எண்.9, கடவு.எண்.16, கடவு.எண்.132) முன்னேற்றத்தில் உள்ளன, ஒரு இரயில்வே மேம்பாலம் (கடவு.எண்.5) நிலஎடுப்பினால் நிலுவையில் உள்ளது, 2 இரயில்வே மேம்பாலங்கள் (கடவு.எண்.4, கடவு.எண்.6) நிலஎடுப்பு சம்பந்தமான வழக்குகளால் நிலுவையில் உள்ளன, மேலும் இரயில்வே மேம்பாலம் கடவு.எண்.131-ல் நிலஎடுப்பிற்கு அதிக இழப்பீடு வழங்கக்கோரி பொதுமக்களின் போராட்டத்தால் நிலுவையில் உள்ளது, இரயில்வே மேம்பாலம் கடவு.எண்.366-க்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்த நிலையில் உள்ளது மற்றும் 1 பாதசாரிகள் சுரங்கப்பாதை கடவு.எண்.10 முழுவதும் இரயில்வே துறையினால் மேற்கொள்ளப்படுகிறது.

புறவழிச்சாலைகள்

2022-23 ஆம் ஆண்டிற்கு, 11 புறவழிச்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி ரூ.115.19 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 1 புறவழிச்சாலை, திருவண்ணாமலை புறவழிச்சாலையின் தொடக்கமும் முடிவும் தேசிய நெடுஞ்சாலையின் இனைப்பில் வருவதால், இப்புறவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையின் 2022-23 ஆண்டுத் திட்டத்தின்கீழ், நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலை அலகிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 10 புறவழிச்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்து ம் பணிகள் மேம்பட்ட நிலையில் நடைபெற்று வருகின்றன.

மேலும், 3 புறவழிச்சாலை பணிகளான பவானி, அம்பாசமுத்திரம், முதுகுளத்தூர் புறவழிசாலைகள் ரூ.172.39 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு தற்பொழுது ஒப்பந்த நிலையில் உள்ளது.

மேலும் கூத்தாநல்லூர் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

2022-23 ஆம் ஆண்டிற்கு ரூ.112.29 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

Feedback

Click here to watch Live Events
playicon

Visitors Counter

004339273
Last Updated: 25-04-2024
Click to listen highlighted text! Powered By GSpeech