Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

tnhighways_header_en

Whats-New-tnrsp smartian  
  • Font Plus
  • Font Default
  • Font Minus
Policy Note 2023-24
Public Works Department - Standard Schedule of Rates 2023-2024
SOR 2023-2024 - Corrected Conveyance table
epathaistructure

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை தகவல் மற்றும் தொலை தொடர்பு நெறிமுறைகளை (ICTS) 2008 ஆம் ஆண்டு வகுத்து அங்கீகரித்து கீழ் உள்ள சவால்களை எதிர்கொள்கிறது

  • நெடுஞ்சாலைத் துறையின் நோக்கத்தை நிறைவேற்றுதல்
  • வன்பொருள் மற்றும் வலையமைப்பு உள்கட்டமைப்பை உருவாக்குதல்
  • GIS வழிமுறை சார்ந்த சாலை தகவல் அமைப்பினை மாநிலம் முழுவதும் நிர்வகித்தும் பயன்படுத்தியும் வருதல்
  • நிதி மற்றும் கணக்குகள் ,திட்ட மேலாண்மை , ஆவண மேலாண்மை ,மனிதவளம் ஆகியவற்றை சிறப்பாக நிர்வாகம் செய்தல்

தமிழகத்தில் உள்ள சாலை வலையமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய உட்கட்டமைப்புகளை திறம்பட மேம்படுத்த இ-பாதை (திட்டம் ,நிர்வாகம்,போக்குவரத்து,நெடுஞ்சாலைத் உடைமைகள் மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பு ) என்னும் அமைப்பினை மாண்புமிகு முதலமைச்சர் திறந்துவைத்தார்.அவ்வமைப்பு தகவல் மற்றும் தொலை தொடர்பு திட்டத்தின் (ICTS) கீழ் பின்வரும் மென்பொருட்களை உருவாகியுள்ளது

  • இ-பாதை- சாலை பராமரிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு RMMS
  • இ-பாதை- புவியியல் தகவல் அமைப்பு GIS
  • இ-பாதை- ஒருங்கிணைந்த திட்டம், மனித வளம் மற்றும் நிதி மேலாண்மை அமைப்பு P&FMS(LIVE)
  • சாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பு RADMS

சாலை பராமரிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு

சாலை மேலாண்மையானது சாலை இணைவமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதாரங்களை தாங்கும் பொருட்டு, ஏற்பட்டுள்ள தரக் குறைவான நிலைமை மேலும் முன்னேற்றம் அடைவதை தடுக்கும் பொருட்டு மற்றும் பாதுகாப்பான, செயல்திறன் மிக்க நம்பகமான முறையில், சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவில் சேதம் ஏற்படும் வகையில் போக்குவரத்து பயணங்கள் செயல்படுத்தும் பொருட்டு ஆகிய குறிக்கோள்களுக்காக செயல்படுகிறது. சாலை தரம் வீழ்ச்சியடைவதற்கான காரணிகள் மற்றும் மாறிகள் எண்ணிலடங்காதவையாக இருப்பதால், சொத்துக்களை கைமுறையாக நிர்வகிப்பது என்பது சிக்கலான பணி ஆகும். எனவே கணினிமயமாக்கப்பட்ட அமைப்பின் உதவியுடன் சாலை பராமரிப்பு நடவடிக்கைகளை திறமையாக செயல்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது.

சாலை பராமரிப்பு மேலாண்மை எனும் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பானது நெடுஞ்சாலைத்துறையால் சாலை கட்டமைப்பின் பராமரிப்பை சாதுர்யமாகவும், திறமையாகவும் நிர்வகிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு இணைய இயலுமைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது . "இச்சாலை மேலாண்மை திட்டமானது 'அமைப்புகள் பொறியியல்' மற்றும் 'மேலாண்மை உத்திகள்' ஆகிய கருத்துக்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது".
சாலை மேலாண்மை அமைப்பானது மேலாளர்கள் அதனில் தொகுக்கப்பட்டுள்ள முறைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் கொண்டு மாற்றுக் கொள்கைகள் வகுத்து முறையான ஒருங்கிணைக்கப்பட்ட வழியில் சாலை அமைப்பினை குறைந்த செலவில் அதிக திறனுடன் பராமரித்து நிர்வகிக்க வழி வகுக்கும் முறையில் உள்ளது.

சாலை மேலாண்மை திட்ட கட்டமைப்பானது தகவல் அமைப்பு மற்றும் முடிவுக்காண் உறுதுணை அமைப்பு ஆகிய இரு முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது. தகவல் அமைப்பு என்பது தரவுகள் மற்றும் தகவல்களை சேகரித்து, ஏற்படுத்தி, நிர்வகிக்கவும் முடிவுக்காண் உறுதுணை அமைப்பு என்பது தன்னுள் உள்ள பயன்பாடுகளின் தொகுதிகளைக் கொண்டு தரவுகளை செயல்முறைப்படுத்தி வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் முடிவுகள் வகுத்து அதன்படி செயல்படுத்தப்படுமாறும் அமைந்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறையால் கொள்முதல் செய்யப்பட்ட 'சாலை அளவீடு மற்றும் தரவுகள் கையகப்படுத்தும்' (ROMDAS) உபகரணத்தைக்கொண்டு, சாலை மேலாண்மை அமைப்பிற்கு தேவையான தளத்தரவுகள் சேகரிக்கப்பட்டு பின்னர் அவ்வமைப்பில் பதிவு செய்யப்படுகிறது. மேலும், அவ்வமைப்பில் உள்ள தரவுகளை நெடுஞ்சாலை வளர்ச்சி மற்றும் மேலாண்மை (HDM4) எனும் மென்பொருளைக்கொண்டு ஆய்வு செய்து எந்த ஒரு சாலைத்திட்டத்தையும் அதற்கு உரித்தான பொருளாதார செயலாக்கம் பெற்று முன்னுரிமை அளிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

RMMS உள் நுழைய இங்கே சொடுக்கவும்

புவியியல் தகவல் அமைப்பு

தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைப்பு வாயிலாக உருவாக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பானது சாலை மேலாண்மை அமைப்பு மற்றும் பாலங்கள் மேலாண்மை அமைப்பு ஆகிய இரு கூறுகளை உள்ளடக்கியுள்ளது. புவியியல் தகவல் அமைப்பானது, கவர்தல் பொருட்டும், நிர்வகிக்கவும், பகுப்பாய்தல் பொருட்டும் , புவியியல் சார்ந்து குறிப்பிடப்பட்ட தகவல்களை அணைத்து விதமாக காண்பிக்கும் வகையிலும், வன்பொருளை, மென்பொருளை மற்றும் தரவுகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறது.

புவியியல் தகவல் அமைப்பு தரவுகளை பல வழிகளில் கண்டு புரிந்து கொள்ளவும், வினா எழுப்பி விளக்கம் பெறவும், காட்சிப்படுத்த அனுமதித்து உறவுகள் வடிவங்கள் மற்றும் போக்குகள் வெளிப்படுத்தவும் உதவுகிறது.

இவ்வமைப்பானது இந்திய நில அளவைத்துறை,மண் அளவை தேசிய பிணையம் மற்றும் நில பயன்பாடு திட்டம், விக்கிமேப்பியா மற்றும் உயர் ரக செயற்கைக்கோள் படங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களை கொண்டு, தமிழ்நாட்டுக்குரிய டிஜிட்டல் அடிப்படை வரைப்படங்களின் கலவையாக பல அடுக்குகளை கொண்டதாக தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலை மற்றும் பாலங்களுக்கு உண்டான இடஞ்சாராதா மற்ற தரவுகளை சாலை மேலாண்மை அமைப்பின் வாயிலாகவும் ,இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் வாயிலாக மக்கள் தொகை விவரங்களையும் , இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக சராசரி மழை அளவு விவரங்களையும் இவ்வமைப்பு கொண்டுள்ளது.

இணைய அடிப்படையிலான புவியியல் தகவல் அமைப்பானது கீழ்க்கண்ட குறிக்கோள்களுக்காக நெடுஞ்சாலைத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது,

  1. 1) சாலைகள் மற்றும் அதன் தொடர்பான கட்டமைப்பு ஆகியவற்றிற்கு உரிய சரியான தகவல்களை எளிதில் அணுகக்கூடிய முறையில் பெறவும்
  2. 2) நெடுஞ்சாலைத்துறை சார்ந்த பணிகளின் திட்டமிடல், நிதி ஒதுக்குதல், கொள்முதல் செய்தல், தகுந்த வளங்கள் ஒதுக்கீடு ஆகிய அனைத்திற்கும் உரிய முடிவுகள் எடுக்கவும்,
  3. 3) பணிகளை பயனுள்ள வகையில் முன்னுரிமைப்படுத்திடவும், அப்பணியின் நிலை அறிக்கையினை அளிக்கவும்,
  4. 4) புவியியல் தகவல் அமைப்பின் பகுப்பாய்வு கருவிகள் வாயிலாக முடிவு எடுக்க மேன்மையன ஆதரவுக்கும்,
  5. 5) சாலைகள் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்பினை திட்டமிட்டு செயல்படுத்தும் நோக்கங்களுக்காக மதிப்பீடு செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது சாலை மேலாண்மை அமைப்பில் உள்ள தரவுகள் அறிக்கை தயாரிக்கவும், வினவும் பொருட்டும், கருப்பொருளாக காட்சிப்படுத்தவும் இணைய அடிப்படையிலான புவியியல் தகவல் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதாவது சாலை மற்றும் பாலங்கள் தொடர்பான சமீபத்திய தரவுகள் சாலை மேலாண்மை அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் இணைய புவியியல் தகவல் அமைப்பில் வினவுதல், அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் பகுப்பாய்தலுக்காக கிடைக்கப்பெறுமாறு இரு அமைப்புகளும் உடனுக்குடன் மாறும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட தரவு சேகரிப்பு உபகரணங்களினால் (ADCE) சேகரிக்கப்பட்ட சாலை மற்றும் பாலங்கள் தொடர்பான தரவுகளும், ஒருங்கிணைந்த திட்டம், மனிதவளம் மற்றும் நிதி மேலாண்மை அமைப்பு (P&FMS) மூலமாக நிதி தொடர்பான தரவுகளும் இவ்வமைப்புடன் ஒருங்கிணைக்கப்படுவதும், இணைய புவியியல் தகவல் அமைப்பின் செயல்பாடு ஆகும்.

GIS உள் நுழைய இங்கே சொடுக்கவும்

ஒருங்கிணைந்த திட்டம், மனித வளம் மற்றும் நிதி மேலாண்மை அமைப்பு

மனித ஆற்றல் சார்ந்த நடைமுறைப்பணிகளை தானியக்க நடைமுறைகளாக மாற்ற "ஒருங்கிணைந்த திட்டம், மனித வளம் மற்றும் நிதி மேலாண்மை அமைப்பு " என்ற மென்பொருள் செயல்பாட்டை உருவாக்கி, செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது .

இந்த மென்பொருளில் திட்ட மேலாண்மை அமைப்பு , நிதி மேலாண்மை அமைப்பு மற்றும் பணியாளர் , விவரப்பதிவு அமைப்பு ஆகிய கூறுகள் வரையறுக்கப்பட்டுள்ளன .

முக்கிய திட்டங்கள் தொடர்பான அனைத்து தரவுகளும் கணினிமயமாக்கப்பட்டு அவை, இந்த அமைப்பில் மின்னணு வடிவத்தில் கிடைக்கப்பெறுகின்றன . மேலும், பணியாளர் நிர்வாகம் தொடர்பான விவரங்களும் இத்தரவுத் தளத்தில் திரட்டி வைக்கப்படுகின்றன . இது இத்துறையின் திறன்மிகு மற்றும் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது .இந்த அமைப்பு துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் மேம்படுத்தும் வகையில் உள்பயன்பாட்டிற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது .

P&FMS (LIVE) உள் நுழைய இங்கே சொடுக்கவும்
P&FMS (Training) உள் நுழைய இங்கே சொடுக்கவும்

சாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பு

தமிழ்நாட்டிற்கான இணையத்தால் செயல்படுத்தப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் (GIS) அடிப்படையிலான “சாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பு” (RADMS), உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் காவல்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

RADMS ன் பயன்பாடுகள்:

  • GIS அடிப்படையிலான விபத்து தரவு தளத்தை உருவாக்குதல்.
  • வலை அடிப்படையிலான அணுகல் மற்றும் தரவு ஓட்டம்.
  • MORTH தரநிலை அறிக்கைகளை உள்ளடக்கிய இசைவான அறிக்கை மற்றும் திட்டமிடப்பட்ட முடிவுகளை வரைபடங்களில் காண்பித்தல்.
  • திறமையான எதிர் நடவடிக்கை திட்டத்திற்கான பிளாக் ஸ்பாட்ஸ் அடையாளம் மற்றும் பகுப்பாய்வு.
  • காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையின் தற்போதுள்ள மென்பொருளுடன் இடைமுகம்.
  • உயர் மேலாண்மை மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களால் மாநிலத்தின் பாதுகாப்பு சூழ்நிலையின் பகுப்பாய்வு.

RADMS என்பது ஒரு விபத்து தரவுதள நிர்வாக அமைப்பு ஆகும் இது சாலை பாதுகாப்பு திட்டங்களின் தெரிவுநிலை மற்றும் நிர்வகித்தலை உறுதி செய்கிறது. இதன் மூலம், சாலை விபத்துக்கள் தொடர்பான பல தரப்பட்ட தகவல்களை காவல்துறை பதிவு செய்யலாம். இந்த GIS (புவியியல் தகவல் அமைப்பு) மென்பொருளின் உதவியுடன் செயல்படும் RADMS, பயனர்கள் விபத்து நடந்த இடங்களை நேரடியாக ஒரு வரைபடத்தில் பொருத்தவோ அல்லது GPS கைபேசிகளை பயன்படுத்தி ஆள் கூறுகள் மூலம் விபத்துக்கான சரியான புவியியல் இருப்பிடத்தை சுட்டிக்காட்டவோ அனுமதிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த தகவல், பல்வேறு வகையான அறிக்கைகளை உருவாக்க வேறு பங்குதாரர்களுக்கும் அளிக்கப்படுகின்றது. அத்தகவல்களும் அறிக்கைகளும் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் / சாலை விபத்துகளை குறைக்கவும் அறிவியல் பூர்வமாக திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உதவுகிறது. இந்த சக்திவாய்ந்த அமைப்பின் மூலம் சிக்கலான காகித அடிப்படையிலான அறிக்கையின் மூலம் விளையக்கூடிய முதல் தகவல் அறிக்கையில் தெளிவின்மை, தரவு கிடைப்பதில் ஏற்படும் பற்றாக்குறை மற்றும் அதிகமான தேக்கநிலை ஆகியவை நீக்கப்படும்.

சாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பின் தரவு சேகரித்தல், தரவைப் பதிவு செய்தல் மற்றும் அறிக்கை தரல் ஆகிய பொறுப்புகளை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ADGP), மாநில போக்குவரத்து திட்டக் குழுமம் (STPC ) அவர்களிடம் ஒப்படைத்துள்ளது. இந்த நம்பகமான தரவு தளத்தைப் பயன்படுத்தி சம்மந்தப்பட்ட துறைகள் பல்வேறு வகையான பகுப்பாய்வுகளை மேற்கொண்டு, மேம்பாடுகளை செயல்படுத்தி தமிழ்நாடு சாலை பாதுகாப்பை மேம்படச் செய்ய இயலும்.

RADMS உள் நுழைய இங்கே சொடுக்கவும்

Feedback

Click here to watch Live Events
playicon

Visitors Counter

004283408
Last Updated: 16-04-2024
Click to listen highlighted text! Powered By GSpeech