Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

tnhighways_header_en

Whats-New-tnrsp smartian  
  • Font Plus
  • Font Default
  • Font Minus
Policy Note 2023-24
Public Works Department - Standard Schedule of Rates 2023-2024
SOR 2023-2024 - Corrected Conveyance table

முதன்மை இயக்குநர் அலுவலகம்

நெடுஞ்சாலைத் துறையின் அணைத்து அலகுகளுடன் ஒருங்கிணைந்து துறை சிறப்பாக செயல்பட உதவுகிறது.

செயல்பாடுகள் :

  • நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து பணியாளர்களின் பணியமைப்பு, தனியார் பற்றிய தகவல்கள் மற்றும் பொதுநிர்வாகம்.
  • நெடுஞ்சாலைத்துறையின் ஒட்டுமொத்த திட்டமிடுதல் மற்றும் வரவு செலவு திட்டம் தயாரித்தல்.
  • தரகட்டுபட்டை கண்காணித்தல்.
  • தகவல் தொழில்நுட்ப குழுமத்தின் மூலம் இ-பாதை தொடர்புடைய தொழில் நுட்பங்களை மேலாண்மை செய்தல்.
  • தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஓப்பளிக்கப்பட்ட “நிறுவனத் திறன் மேம்பாடு” மற்றும் “சாலை பாதுகாப்பு” கூறுகளை நிறுவனத் திறன் மேம்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்பு குழுமத்தால் (ICERS Cell) நடைமுறைபடுத்துதல் மற்றும் கண்காணித்தல்.
  • பயிற்சி.
  • நிலம் கையகப்படுத்துதலை துரிதப்படுத்தல்.
  • நீதிமன்ற வழக்குகளின் ஒருங்கிணைப்பு.

நிர்வாகம் :

இத்துறையின் நிர்வாகம் மற்றும் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் பணியமைப்பு ஆகியவற்றிற்கான ஒட்டு மொத்தப் பொறுப்பு, முதன்மை இயக்குநர் அலுவலகத்தைச் சார்ந்ததாகும். நெடுஞ்சாலைத் துறையானது 1805 பொறியாளர்கள், 843 தொழில் நுட்பப் பணியாளர்கள், 4751 நிர்வாகம் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என மொத்தம் 7399 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.

திட்டமிடல் :

நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு திட்டங்களுக்கான ஒட்டு மொத்தத் திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான பணிகள் செய்யப்படுகிறது. சாலை மற்றும் சாலை வலையமைப்பின் தரத்தினை மேம்பாடு செய்வதற்கான பல்வேறு முன்மொழிவுகள் ஒப்புதலுக்காகவும், செயல்படுத்துவதற்காகவும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தரக்கட்டுப்பாடு :

நெடுஞ்சாலைத் துறையில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் ஒட்டு மொத்த பணிகளின் தரக்கட்டுப்பாட்டை கண்காணித்தல்.

தகவல் தொழில்நுட்பக் குழுமம் மூலமாக இ-பாதை தொடர்பான தகவல் தொழில்நுட்பம்

தமிழகத்தில் உள்ள சாலை வலையமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய உட்கட்டமைப்புகளை திறம்பட மேம்படுத்த இ-பாதை (திட்டம்,நிர்வாகம்,போக்குவரத்து,நெடுஞ்சாலை உடைமைகள் மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பு) என்னும் கீழ் கண்ட மென்பொருட்களை உள்ளடக்கிய அமைப்பானது தொழில் நுட்பக் குழுமத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

  • சாலை பராமரிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு (RMMS)
  • புவியியல் தகவல் அமைப்பு (GIS)
  • ஒருங்கிணைந்த திட்டம்,மனித வளம் மற்றும் நிதி மேலாண்மை அமைப்பு (P&FMS)

‘e-பாதை’ மென்பொருளில் சாலை பணிகளை சிறந்த முறையில் முன்னுரிமைப்படுத்த சாலை பராமரிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு (RMMS) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளில், இது வரை மாநிலச்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் ஆகியவற்றின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்பொழுது இவ்வமைப்பு மாவட்ட இதர சாலைகள் மற்றும் கரும்புச் சாலைகளின் தகவல்களையும் பதிவேற்றம் செய்யும் வகையில் பயனாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

‘e-பாதை’ பயன்பாட்டு மென்பொருளின் மற்றொரு அம்சமான புவியியல் தகவல் அமைப்பானது (GIS), சாலை பராமரிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளின் புவிவெளி சார்ந்த பண்புகளைக் (Spatial Data) காண உதவுகிறது. நவீன பயன்பாடுகளின் உதவியுடன், GIS அமைப்பானது நேரடியாக சாலை பணிகள் நிகழும் இடங்களில் இருந்து தகவல்களை கைபேசி பயன்பாடு (Mobile Apps) மூலமாக பெறும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.

நெடுஞ்சாலைத் துறையில் மாநிலம் முழுவதும் கணினிமயமாக்குதலை செயல்படுத்தி, மனித ஆற்றல் சார்ந்தப் பணிகளான திட்ட மேலாண்மை, நிதி மேலாண்மை, மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, பணியாளர் தகவல் பதிவு அமைப்பு, திட்டக் கண்காணிப்பு, அலுவலக மேலாண்மை ஆகிய பணிகளை துரிதப்படுத்தும் வகையில் ‘திட்டம், மனித வளம் மற்றும் நிதி மேலாண்மை அமைப்பு’ (P&FMS) உருவாக்கப் பட்டுள்ளது.

நிறுவன திறன் மேம்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு குழுமம்

நிறுவனதிறன் மேம்பாடு

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் - II இன் கீழ் ரூ.66.00 கோடி செலவில் நிறுவன திறன் மேம்பாட்டு பணிகள் உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் முக்கிய கூறுகள் பின்வருமாறு.

    ">
  • 1.மேற்பார்வை மற்றும் ஆய்வு தகவல் அமைப்புகள் (சாலைப் பயானாளிகள் மனநிறைவு ஆய்வு, இதர அமைப்புகள்)
  • 2.செயல்முறை மேம்பாடு மற்றும் அமைப்பு முறை சீர்மைத்தல்.
  • 3.தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொலைதொடர்பு அமைப்புகள் (e-Pathai) மேம்படுத்துதல்.
  • 4.மனித வள மேம்பாடு (பயிற்சிகள்)
  • •தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டம், 2001 மற்றும் விதிகள் 2003 – ஐ திருத்தி மேம்படுத்தும் பணி ஆலோசகர் மூலம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
  • •நெடுஞ்சாலை கையேடுகள் திருத்தி மேம்படுத்தும் பணி எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆலோசகர் நியமிக்கபட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.
  • •இத்துறைக்கு தேவையான கணினிகள், மற்றும் மடிக்கணினிகள் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் (Electronics Corporation of Tamil Nadu (ELCOT)) மூலம் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • •இத்துறைக்கு நிலம் கையகப்படுத்த “கணினி மயமாக்கப்பட்ட மேலாண்மை தகவல் அமைப்பு (CMIS)” தேசிய தகவல் மையம் (NIC) மூலம் உருவாக்குதல்.
  • •இத்துறையின் முக்கிய பணிகளை தானியங்கும் வகையில் “பணிகள் மேலாண்மை அமைப்பு” தேசிய தகவல் மையம் (NIC) மூலம் உருவாக்குதல்
  • •புதிதாக நிறுவப்பட்டுள்ள பயிற்சி மையத்திற்கு தேவையான பயிற்சி கொள்கை, பயிற்சி அட்டவணை, பயிற்சி கையேடு, நிலையான இயக்க நடைமுறை (SOP) பயிற்சி மையத்திற்கான வணிக மேம்பாட்டுத் திட்டம் ஆகியன ஆலோசகர் மூலம் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
  • •மின் நூலகம் அமைக்கப்பட்டு மென்பொருள் TNSDC – மூலம் செயல்பாட்டில் உள்ளது.

சாலை பாதுகாப்பு

உலக வங்கி நிதியுதவி பெற்ற தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் - II இன் கீழ் ரூ.120.00 கோடி செலவில் சாலைப் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் முக்கிய கூறுகள் பின்வருமாறு.

  • 1.மாநில அளவில் – செயல்முறை வியூகம் ஆலோசனை
  • 2.மாநில அளவில் – செயலாக்க உதவி
  • 3.மாவட்ட அளவில் முன்முயற்சிகள் - காஞ்சிபுரம்
  • 4.இரண்டாவது மாவட்ட அளவில் முன்முயற்சிகள் – திருவண்ணாமலை.
  • 5.சாலை வழித்தட முயற்சிகள்

நெடுஞ்சாலைகள், சுகாதாரம், காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வி துறை போன்ற பல்வேறு பங்குதாரர்களின் சாலைப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் மேலாண்மைத் திறனை மேம்படுத்துவதற்கான பல்துறை அணுகுமுறை பின்பற்றபடுகிறது.

  • •தமிழகத்தின் சாலை பாதுகாப்பு மேலாண்மை திறனை மேம்படுத்துவதற்கு மற்றும் செயல்பாட்டு முயற்சிகளை மேற்கொள்வதில் சாலை பாதுகாப்பு மேலாண்மை ஆலோசகர் சேவை வழங்குதல்.
  • •தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்டம் – II சாலை பாதுகாப்பு கூறுகளின் கீழ் சாலை பாதுகாப்பு பணிகளுக்காக நிதியுதவி பெறுகின்றன. கீழ்கண்ட முக்கிய சாலை பாதுகாப்பு பணிகள் இத்துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
  • •நெடுஞ்சாலை, சுகாதாரம், காவல், போக்குவரத்து, கல்வி துறை ஆகிய துறைகள்
  • •“சாலை பாதுகாப்பு மாதிரி வழித்தட திட்டத்தில்” (காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) 95.60 கி.மீ.-ல் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு பணி மற்றும் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு செயலாக்கத்தில் உள்ளது.
  • •சுகாதார நிபுணர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டு, திருவண்ணாமலை தலைமையக மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் தலைமையக மருத்துவமனையில் உள்ள சிறப்பு மையத்திற்கான மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்தல் மற்றும் அவசர சேவைகளை வலுப்படுத்துவதற்காக மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்க கொள்முதல் மேற்கொள்ளுதல்.
  • •சாலை பாதுகாப்பு மாதிரி வழித்தட திட்டம் காவல் துறைக்கான சாலை பாதுகாப்பு பணிகள் அமலாக்கத் தொடர்பான உபகரணங்களை வாங்குதல்.
  • •காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், பள்ளி குழைந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

பயிற்சி :

இத்துறையை சார்ந்த பணியாளர்களுக்கு அறிவு, திறன் மற்றும் அணுகுமுறையை வளர்க்க பயிற்சி அவசியமாகிறது. இத்துறையை சார்ந்த பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்களின் மூலம் சுழற்சி முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  • இத்துறையை சார்ந்த பொறியாளர்களுக்கு, புதுப்பிப்பு படிப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட படிப்புகளுக்கு, புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்கள் அதாவது இந்திய நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் கழகம் (IAHE), இந்திய சாலை கூட்டமைப்பு (IRC), மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் (MORT&H) ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய போக்குவரத்து மேம்பாட்டு நிறுவனம் (AITD), சர்வதேச பாலம் மற்றும் கட்டமைப்பு பொறியியல் சங்கம் (IABSE), நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் (HRS), உலக சாலை கூட்டமைப்பு (IRF) முதலியன வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகின்றது.
  • ஈரோட்டிலுள்ள பாவானிசாகரில், குடிமுறை அரசுப்பணி பயிற்சி மையத்தின் மூலம் அனைத்து அமைச்சு பணியாளர்களுக்கும் அலுவலக நிர்வாகம் தொடர்பான பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படுகின்றது.
  • இத்துறையின் பொறியாளர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கும் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு படிப்புகள், சுய ஊக்குவிப்பு திட்டம் மற்றும் மேலாண்மை படிப்புகள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.

நிலம் கையகப்படுத்துதலை துரிதப்படுத்தல்:

முதன்மை இயக்குநர் அலுவலகம், களத்தில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து, மைய நிலம் கையகப்படுத்தும் அமைப்பின் மூலம் நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்துகிறது.

நீதிமன்ற வழக்குகளின் ஒருங்கிணைப்பு :

முதன்மை இயக்குநர் அலுவலகம், தனியாக ஒரு சட்ட பிரிவின் மூலம் மாண்பமை நீதிமன்ற அரசு வழக்கறிஞர்களோடு இணைந்து முக்கிய தொழில்நுட்ப மற்றும் பணியாளர்கள் தொடர்பான வழக்குகளை தினசரி ஒருங்கிணைக்கிறது.

Feedback

Click here to watch Live Events
playicon

Visitors Counter

004296208
Last Updated: 19-04-2024
Click to listen highlighted text! Powered By GSpeech