Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

tnhighways_header_en

Whats-New-tnrsp smartian  
  • Font Plus
  • Font Default
  • Font Minus
Policy Note 2023-24
Public Works Department - Standard Schedule of Rates 2023-2024
SOR 2023-2024 - Corrected Conveyance table

துறை பற்றி

அறிமுகம்

தமிழ்நாடு அரசானது மாநிலத்தின் சாலைகள் மற்றும் பாலங்களின் பணிகளை பிரத்தியேகமாக மேற்கொள்ள 1946 ஆம் ஆண்டிலேயே புதிதாக நெடுஞ்சாலைத் துறையினை உருவாக்கிய தனித்துவ அடையாளத்தினை கொண்டது. தமிழ்நாடு,சாலைகள் மற்றும் பாலங்களுக்கான நிலையான தரவரைவுகளை,1954 ஆம் ஆண்டிலேயே கொண்டு வந்ததன் மூலம் முன்னோடியாகத் திகழ்கிறது. அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளை பராமரித்தல்,மேம்படுத்துதல் மற்றும் ஊரக வாழிடங்களுக்கு சாலை இணைப்பினை,அனைத்து பருவகால நிலைகளிலும் வழங்குதல் ஆகியவை இத்துறையின் குறிக்கோளாகும். அரசுச் செயலாளர்,நெடுஞ்சாலைத்துறை என்னும் ஒரு புதிய பதவி 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது வழக்கத்தில் உள்ளது. பின்னர் சிறு துறைமுகங்களும் இத்துறை வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அடுத்ததாக இத்துறை 'நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நோக்கம்

நெடுஞ்சாலை அமைப்பின் கொள்திறன், இணைப்பு, செயல்திறன் மற்றும் பாதுகாப்பை அதிகரித்து, இம்மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த அனைத்துப் பிரிவு மக்களும் சமநிலையான சமூக பொருளாதார மேம்பாட்டை அடையச் செய்வதே நெடுஞ்சாலைத் துறையின் குறிக்கோளாகும்.

சாலை வலைப்பின்னலமைப்பின் முக்கியத்துவம்

துரிதமான தொழில் வளர்ச்சிக்கு போதுமான மற்றும் தரமான உள்கட்டமைப்பு இன்றியமையாததாகும். இதன் மூலம் ஆதாயம் தரும் தொழில் வாய்ப்புகளை மக்களுக்காக உருவாக்க இயலும். சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை எளிதில் அணுகக் கூடிய வகையில் இணைப்பை உருவாக்குதல், ஊரக பகுதிகளின் வளர்ச்சிக்கு வித்திடும். தமிழ்நாடு, நகர்ப்புறங்களையும், வேளாண் சந்தைப் பகுதிகளையும் மற்றும் ஊரக வாழிடங்களையும் இணைத்த, தரமான மற்றும் பரந்து விரிந்த, விரிவான சாலை வலைபின்னலமைப்பினைக் கொண்டதாகும்..

நெடுஞ்சாலைத்துறை புதுமையான மற்றும் சிறந்த நடைமுறைகள், உயரிய தொழில்நுட்பங்கள் மற்றும் உள் (ம) வெளி வளங்களின் பொறுப்பான மேலாண்மை ஆகியவற்றின் மூலம் உயர் தரமான, சிக்கனமான, சுற்றுச்சுழலுக்கு உகந்த சாலை வலைப்பின்னலமைப்பை தமிழ்நாட்டின் சாலை உபயோகிப்பவர்களுக்கு தந்து சேவை செய்கிறது. மேலும், நம்பத்தகுந்த மற்றும் பாதுகாப்பான இச்சாலைகள் மாநிலத்தின் நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலனில் சிறந்த பங்களிக்கிறது.

தற்போதைய சாலைகளின் நிகழ்நிலவரம்

மாநிலத்தில் 70,556 கி.மீ வரை சாலைகளை நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது. சாலை நீள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

ஆண்டு மொத்த நீளம் (கி.மீ)
1951 32,300
2016 62,460
2017 62,468
2018 63,650
2019 66,039
2020 66,039
2021 70,556

 

வகை வாரியான சாலை விவரங்கள்
Length of road (in Km)
Classification of Roads Length
National Highways (NH) State National
Highways Wing
1677
National Highway
Authority of India
5128
Total 6805
State Highways (SHs) 12291
Major District Roads (MDRs) 12034
Other District Roads (ODRs) 42057
Total length of roads other than NH 66382
Overall Total 73187

வழித்தட வாரியான சாலை விவரங்கள்
DETAILS OF LANE CONFIGURATION (in Km)
Category Single Lane Intermediate Lane Double Lane Two Lane With
paved
shoulder
Four Lane Six Lane Eight Lane Total
National Highways (NH) - - 1602 2212 2649 333 9 6805
State Highways (SH) 39 366 7519 2651 1466 250 - 12291
Major District Roads (MDR) 745 5416 5412 405 53 3 - 12034
Other District Roads (ODR) 33505 7029 1433 78 12 - - 42057
Total 34289 12811 15966 5346 4180 586 9 73187

 

Feedback

Click here to watch Live Events
playicon

Visitors Counter

004174689
Last Updated: 29-03-2024
Click to listen highlighted text! Powered By GSpeech