Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

tnhighways_header_en

Whats-New-tnrsp smartian  
  • Font Plus
  • Font Default
  • Font Minus
Policy Note 2023-24
Public Works Department - Standard Schedule of Rates 2023-2024
SOR 2023-2024 - Corrected Conveyance table

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II Access link to TNRSP

தமிழ்நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிக வாகன நெருக்கடி மிகுந்த சாலைகளை உலகவங்கி கடன் உதவியுடன் மேம்படுத்த “தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாவது அலகு, திட்ட இயக்குநர் தலைமையில் 1 தலைமை பொறியாளர், 2 கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் 8 கோட்ட பொறியாளர்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது அதிக வாகன நெருக்கடி மிகுந்த 1155 கி.மீ நீளமுள்ள சாலை தொடர்களின் மேம்பாடு மற்றும் பராமரிப்பை உள்ளடக்கியதாகும்.

பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) முறையில் சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தப்பணிகள்:

இந்த முறையில் ஒப்பந்தக்காரர் வடிவமைப்பு, கட்டுமானம் செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார். இந்த முறையில் 427.967 கி.மீ நீளமுள்ள சாலைகள் 10 தொகுப்புகளாக ரூ.1704.91 கோடி மதிப்பில், கடின தளபுருவம் கொண்ட, இருவழிச் சாலைகளாக அகலப்படுத்தி தரம் உயர்த்தி, ஐந்து ஆண்டு காலம் பராமரிக்க எடுத்துக்கொள்ளப்பட்டது. அவற்றில் 392.167கி.மீ நீளமுள்ள 9 தொகுப்புகள் முடிவடைந்து, அவற்றின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 35.800 கி.மீ நீளமுள்ள இபிசி 04 தொகுப்பு பணி முடிவுறும் தருவாயில் உள்ளது.

வெளித்திறன் மற்றும் செயல்பாட்டு அடிப்படையிலான சாலை பராமரிப்பு ஒப்பந்தப்பணிகள் (OPRC)

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-|I ன் மூலம் மேம்படுத்தப்பட்ட சாலைகள் வெளித்திறன் மற்றும் செயல்பாட்டு அடிப்படையிலான சாலை பராமரிப்பு முறையில் 5 ஆண்டுகள் பராமரிப்பிற்கு எடுத்துகொள்ளப்பட்டன. 2 தொகுப்புகள் கொண்ட 581.493 கி.மீ நீளமுள்ள ஒ.பி.ஆர்.சி சாலையில் பராமரிப்பு பணிகள் ரூ.220.07 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

பொது தனியார் கூட்டு ஒப்பந்தங்கள் (பிபிபி ஒப்பந்தம்)

மேலும் 70.2 கி.மீ நீளமுள்ள பொது தனியார் பங்களிப்பு-02 (Public Private Partnership-02) தொகுப்பு பணி முடிக்கப்பட்டு 8 ஆண்டு கால பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பொது தனியார் பங்களிப்பு (P.P.P.-01) Public Private Partnership-01 மற்றும் (P.P.P.-03) Public Private Partnership-03 ஆகிய 2 தொகுப்பு பணிகள் EPC-16 மற்றும் EPC-14, EPC-15 என மூன்று பணிகளாக மாற்றம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கூடுதல் பணிகள்

உலக வங்கியிடமிருந்து அனுமதிக்கப்பட்ட எஞ்சிய கடனுதவி தொகையிலிருந்தும், மாநில நிதி உதவி மூலமும் செயல்படுத்த பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் முறையில் EPC-11, EPC-12, EPC-13 ஆகிய மூன்று கூடுதல் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலே கூறப்பட்ட பணிகள் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன

தொகுப்பு

எண்.

சாலையின் பெயர்

நீளம் (கி.மீ-ல்)

ஒப்பந்த தொகை (கோடியில்)

பணிகளின் தற்போதைய நிலை

EPC-04

விருத்தாச்சலம் பரங்கிப்பேட்டை சாலை கி.மீ 0/000 முதல் கி.மீ 35/800 வரை மேம்பாடு செய்தல் (எஞ்சிய பணிகள்)

35.800

129.94

பணி முடிவுறும் தருவாயில் உள்ளது

EPC-11

நான்கு வழிச் சாலை - ஓமலூர் - மேச்சேரி - மா.நெ. 222 (கி.மீ 1.150 - கி.மீ. 14.300)

13.170

144.64

பணிகள் நடைபெற்று வருகிறது

EPC-12

உறுதிப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் - ஆத்தூர் - மல்லியக்கரை சாலை -மா.நெ 30 (கி.மீ 81.125 - கி.மீ 91.200)

9.884

95.14

பணிகள் நடைபெற்று வருகிறது

EPC-13

நான்கு வழிச் சாலை -சித்தோடு - ஈரோடு மா.நெ.15 (கி.மீ 153.500 - கி.மீ 161.625)

8.125

104.70

பணிகள் நடைபெற்று வருகிறது

EPC-14

திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் சாலையில் கி.மீ 5.0 முதல் கி.மீ 27.700 வரை நான்கு வழிச் சாலையாக உறுதிப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் (தொகுப்பு எண் I)

22.700

176.58

பணிகள் நடைபெற்று வருகிறது.

EPC-15

திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் சாலையில் கி.மீ 27.700 முதல் கி.மீ 50.600 வரை நான்கு வழிச் சாலையாக உறுதிப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் (தொகுப்பு எண் II)

22.900

254.13

பணிகள் நடைபெற்று வருகிறது

EPC-16

நான்கு வழிச் சாலை- மேட்டுப்பாளையம்-சத்தி- கோபி - ஈரோடு மா.நெ-15 (கி.மீ 123.0- 153.60)

30.600

272.53

பணிகள் நடைபெற்று வருகிறது

ஆக மொத்தம்

143.179

1177.66

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி (தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (TNIDB-Tamil Nadu Infrastructure Development Board) நிதி உதவியுடன்)

3319 கி.மீ நீளமுள்ள சாலைகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்காக TNIDB மூலம் ரூ.132.76 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1061 கி.மீ நீளமுள்ள சாலைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் 5 தொகுப்புகளாக ஆலோசர்கள் மூலம் நடைபெற்று வருகின்றன

Feedback

Visitors Counter

004326724

Click here to watch Live Events
playicon

Last Updated: 23-04-2024
Click to listen highlighted text! Powered By GSpeech